-------------
"விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகய
'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது
நலனே அம்ம! நாணுதும், நும்மொடு
நகய விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே!"
- நற்றிணை
சுருங்க சொல்லின், 'நீ வளர்த்த இம்மரம் உனக்கு தங்கை போன்றது' என்று அன்னை சொல்லி இருப்பதால், உன்னோடு இம்மரத்தடியில் இன்புற நாங்கள் நாணம் அடைகிறோம் என்று தோழி கூறுகிறாள்.
புன்னை மரத்தை தங்கையாக பார்க்கும் ஒரு கலாச்சாரம் இன்று அடைந்துள்ள சீரழிவு பற்றி சொல்ல தேவை இல்லை.
குறுந்தொகை படித்திருக்கிறேன். நற்றிணை தேடி படிக்க வேண்டும்.