Jesus Christ Superstar (2012)

As part of doing his thing for the Covid-19, Andrew Lloyd Webber is making some of his musicals available for a short period to everyone through Youtube (Yahhh!!). So if you are like me - a fan of stage show musicals and grand productions - this is for you and your weekends and the sullen mood of the quarantine days with endless bad news can take a hike!.

Very appropriately, the release for Good Friday is the contemporary re-telling of Jesus Christ's last seven days in the fabulous rock musical - 'Jesus Christ Superstar'. There are many versions available (that is the point of a stage show anyway!) and this one rocks really the way it re-imagines Christ. 

Jesus Christ - if you strip away the divinity and can look at the man as he lived in Israel about 2000 years ago, is a remarkable man. Without the godliness, he was actually a reformer of faith, who worked hard to reform his own religion. He did what every other reformer in the world did - he gathered a following and raised a banner against the institution, which was protecting the corrupt and exploiting the gullible.

Every reformer, who is worth his salt, becomes a revolutionary as well - if not willingly, by the flow of events around him. Jesus is no different, when his efforts to reform from within fails, he revolts against the institution of the religion and gets crucified. Then, he becomes divine and like Judas sings when the show starts - everyone forget the words of the man himself and Christ becomes an institution himself - which again is what happens to most of the revolutionaries.

The re-imagining of the show moves the timeline to somewhat of the modern world and Jesus is a leader of people fighting against the established institutions of religion. He puts people before profit and antagonize the men in suits enough to end up crucified. The entire story fits like a glove and there is not much surprise to find out what happens to working guys who start questioning the suits playing golf.

The story is told between Mary Magdalene, Judas and Jesus. The rest of the cast supports and does not interfere. Judas is given interesting space who questions the path Jesus has chosen and conflicts with Jesus before betraying him to Caiaphas's police. The show explores the psychology of the relation between Judas and Jesus and tries to explain why Judas did what he did.

Mary M is full of love for Jesus and is really confused as to the nature of her affection for him. There is a lot of self-doubt and what starts as a question around why she is unable to attract him while being attracted to him ends with a lot of crying as Jesus is crucified at the end.




The songs are absolutely fabulous and the live rock band rocks. Of course, my favorite is the title track which is an absolute classic and the 'Gethsemane'. The song around Herod's real funny show on the trial of Jesus - highlighting Herod's self-obsession - is very good as well.

The version does not follow the Biblical sensitivity and so, if you are looking for a more conservative take on the story, this is not the right one to watch. But, like me, if you like JC for what he is and what he stands for without all the divinity and mystical shroud over him, you will thoroughly enjoy.

The show is available only till 11.30pm IST tomorrow - so if you want to watch it, watch it quickly.

The Wind Rises (2013)

"Le vent se lève!... Il faut tenter de vivre!" 
("The wind rises!... We must try to live!")
 - Paul Valery 

Netflix started making all the movies of 'Studio Ghibli' available from February or so. Being a big fan, I started re-watching my favorites - 'My neighbor Totoro', 'Spirited Away', 'Princess Mononoke' - and the rest of the movies I've loved from the first time I saw them.

There were movies I have not seen - like the farewell classic of Hayao Miyazaki - 'The Wind Rises'. The movie's name comes from the poetic lines of the Paul Valery and is suppose to mean the resilience of life in hard times and how it fits into life as we know it today.

The movie is the semi-fictionalized story of Jori Horikoshi - the aeronautical engineer from Mitsubishi- who designed, what was arguably the best, fighter plane of the World war 2, the Mitsubishi zero. The movie recounts his tale with a lot of fictionalized moments mixed in.

Though the story line sounds triumphant - a little boy from a rural place gets his dream of designing a great airplane fulfilled - it is, in reality, a tragic story. As I watched through the movie, I cannot but think of the word 'cursed'. The romance that builds between Jori and Naoko - also take the familiar route towards tragedy and the moment Naoko passes away - as the wind rises from the Zero - probably is the most poignant scene of the movie.

Miyazaki said that he decided to make the movie when he heard the real Jori say that he built the plane because it is the most beautiful thing. However, what Jori designed was a fighter plane used in a devastating war against China and other countries to subdue them, causing irreplaceable damages to places and killing hundreds of thousands of people.

While building the plane itself was a dream, beautiful and ambitious, the moment it was realized, the dream becomes cursed. Jori realizes it that much in the movie at least - not sure whether he regretted being agent of an Imperial Japan in real life - and regrets that he helped building it.

The story starts with a young Jori dreaming of designing a beautiful plane and also fighting the backwardness of Japan in the late 1920's. He becomes an engineer and joins Mitsubishi. He visits Germany and the western countries as part of a Japanese delegation and regrets the backwardness of Japan in comparison to those countries. He decides to close the gap in airplane building when he gets back.

However, to me, the most interesting moments in the movie are when Jori meets Naoko. He meets Naoko in a train during the Great Kanto Earthquake and enamored with her. After a long break, they meet again in a mountain resort where Naoko has come for a respite from Tuberculosis. They fell in love and decide that Naoko should get into a sanatorium to be cured. She does and becomes worse. So she runs away to Jori and marries him. They have a short life together and she leaves when the TB worsens for him to focus on his work. Jori is heartbroken and as his dream airplane take to the skies, he realizes that she is dead.

The curse that haunts him in his art - he designs - and love is the central theme of the movie. As a designer and someone who dreams of new ways of building beautiful air planes - he realizes the horror of what he has accomplished when the plane actually starts flying. As a lover, he falls in love with a sick girl knowing that the chances of her making it is very low and ends up losing her.

The mystery of love is that it does not look into the antecedent of who you are in love with. He falls in love with a sick girl and within the ambit of the love he shares with her, never let that fact come to the fore. They have some beautiful moments together and part forever. As much as it is bittersweet, it is in essence the tragedy of love itself. Similarly, he designs without realizing the consequence of what he is doing - the artist focusing on his work - only to realize later that what he designs is a war machine.

The only issue I've had with the movie is its pacing - it is a tad slow at parts - but overall, the movie leaves you with a sad note of the life we live. Especially in times like this, where a little virus is showing the limits of what we can do, the only thing to say is

"Le vent se lève!... Il faut tenter de vivre!"

கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை - 2

"ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டால் மீண்டும் அதற்குள் செல்வது மிக கடினமானது" என்கிறார் ஹோல்ட்-லுண்ட்ஸ்டாட். "பொருளாதார பின்னடைவு பற்றி கவலை படும் நாம், இந்த சமூக தனிமை கொண்டு வரும் சமுக பின்னடைவை பற்றியும் கவலை பட வேண்டும். இந்த வைரஸ் நாட்களை தாண்டிய பின்னரும் இந்த சமூக தனிமை நாட்கள் நம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்" என்கிறார்.
இதன் பின் உள்ள அறிவியலை அறிதல் அவசியம். தனிமை என்பது வெறும் உணர்வல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாகம் எப்படி தண்ணீரை தேட வைக்கிறதோ, பசி எப்படி உணவை தேட வைக்கிறதோ, அது போன்றே தனிமை பிற மனிதர்களை தேட வைக்கும் உயிரியல் அறிகுறி என்கிறார் ஹோல்ட்-லுன்ஸ்டாட்*.  வரலாற்றுரீதியாகவும் பிற மனிதர்களுடனான நமது உறவு உயிர் வாழ்வதற்கு ஒரு இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காலங்களில் இந்த தனிமை பிற மனிதர்களை தேடவைக்கும்.
இந்த கோவிட்-19 கொண்டு வரும் பல முனை நெருக்கடி - சுகாதாரம், பொருளாதாரம், சமூக வாழ்வு , வேலை - போர் களங்களில் நிகழ்வது போன்ற அழுத்தங்களை கொடுத்து PTSD என்னும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு போன்ற நோய்களை கொண்டு வரக்கூடியது. 2005 கத்ரினா புயல் காலங்களில் லூசியானா மாநிலத்தில் மக்கள் கண்ட பேரழிவு இது போன்ற மன நல பாதிப்புகளை ஏற்படுத்தியது. 2001இல் உலக வர்த்தகமைய தாக்குதலில் பாதிக்க பட்டவர்களுக்கு வைத்தியம் புரிந்த மருத்துவர் சூ வர்மா சொல்வது இது "9/11 தாக்குதலோ அல்லது கத்ரினா புயலோ அல்லது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியோ எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்து முடிந்த விஷயங்கள். இந்த கொரோனா பாதிப்போ இன்னமும் எவ்வளவு காலங்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கின்றது. இது இந்த மன அழுத்தங்களை இன்னமும் அதிகரிக்கும்."
இந்த மன அழுத்தங்கள் தங்கள் வழமையான வடிகால்கள் - பிற மனிதர் தொடர்பு - இல்லாமல் இருக்கின்றன. "ஒருவரை அன்பால் தொடும்போது ஆக்சிடாக்சின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இதே ஹார்மோன் தாய்-பிள்ளை தொடுதலின்போதும், கலவியின் உச்சத்திலும், அன்பாய் அரவணைக்கும் போதும் சுரக்கும்" என்கிறார் சூ வர்மா. இன்றைய நிலைமையில் இந்த அவசியமான ஹார்மோன் சுரப்பு பலருக்கும் இல்லை.
நீடித்த தனிமை ஒரு நாளைக்கு 15 சிகரெட்களை ஊதுவதற்கு சமம் என்கிறார் மருத்துவர் வர்மா. இது இருதய நோய்கள், வாதம், உடல் பருமன் முதலிய நோய்களோடு மரணத்தையும் கொண்டு வரும். ப்ளோரிடா மாநில பல்கலைக்கழகம் 2018இல் நடத்திய ஆய்வு இத்தனிமை டெமென்ஷியா என்னும் மறதி நோய் வரும் வாய்ப்பை 40 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது.
Woman at the Window - Salvador Dali
இந்த தனிமை மன அழுத்த நோய் வரும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேலான இந்த மன அழுத்தம் - அதாவது இந்நோயின் ஒன்பது அறிகுறிகளில் ஏதேனும் ஐந்து (மகிழ்வூட்டும் நிகழ்வுகளில் நாட்டமின்மை, குற்றவுணர்வு, சோம்பல் , பசியின்மை, தூக்கமின்மை, கவனமின்மை, மெதுவாக இருத்தல் போன்றவை) இரண்டு வாரங்கள் தொடர்ந்தால், அது மேலும் ஒரு முறை மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பை 50 சதவிகிதம் அதிகரிக்கிறது.  இரண்டு முறை மன அழுத்தத்திற்கு ஆளாவது மூன்றாவது முறைக்கான வாய்ப்பை 75 சதவிகிதமும், நான்காவது முறைக்கு ஆளாவதற்கான வாய்ப்பை 90 சதவிகிதமும் அதிகரிக்கிறது. இந்த சுழற்சியில் இருந்து விடுபடுவது எளிதல்ல.

 இந்த கொரோனா கொள்ளை நோய், நாமும், நம் மூளையும் இந்த பூமியில் வாழ்வதற்கு எது தேவை என்று கற்று வந்ததற்கு நேர் எதிரான ஒன்றை செய்ய சொல்கிறது. விர்ஜினியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஜேம்ஸ் கோஆன், கடுமையான உளைச்சலில் நம் மூளை எப்படி வேலை பார்க்கும் என்பதை விர்ஜினியா மலைகளில் வாழும் சலமாண்டெர் உயிரினத்துடன் ஒப்பிடுகிறார். "சலமாண்டெர் ப்ளூ ரிட்ஜ் மலை பிரதேசத்தில் நல்ல குளிரான, இருட்டான, ஈரப்பதமான இடத்தில வாழக்கூடியது. அதை நன்கு சூரியன் சுட்டெரிக்கும் ஒரு பாறையில் விட்டால் அது மீண்டும் தன்னுடைய இருட்டு பாறைக்கு அடியில் செல்ல முயலும். இன்றைய நமது நிலைமை இத்தகைய பாறையில் விடப்பட்ட சலமாண்டெர் போன்றது. ஆனால் பாறைக்கு அடியில் மீண்டும் செல்ல முயல்வது நம் உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டு விட்டோம்."

மனிதர்கள் ஏன் கைகளை பிணைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது குறித்து பாடம் எடுப்பவர் ஜேம்ஸ். அவரின் கருத்தில் நமது மூளை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நம் உணர்வுகளையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் உடையது. ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாய் இருப்பது இந்த திறனை அதிகரிக்க வைக்கிறது. நாம் தனியாகவோ, ஒருவருடன் தொலைபேசியில் அல்லது ஒரு திரையில் பேசுவதை விட, அதே நபருடன் நேருக்கு நேர் உரையாடும்போது நம் மூளை இன்னமும் திறனுடன் செயல்படுகிறது. "தொலைவில் இருக்கும் ஒருவரை விட நாம் அருகில் இருக்கும் ஒருவரையே விரும்புவோம். நம் மூளை எப்போதும் எது செய்தாலும் அதை இருப்பதிலேயே சிக்கனமான முறையில் செய்ய முயலும். ஒரு சமூகத்தில் வாழ்வது இதை சாத்திய படுத்துகிறது. இதுவே (Economy of Action) என்னும் உயிரியல் தத்துவம்" என்கிறார் ஜேம்ஸ். நமக்கு பிடித்தமான ஒருவருடன் கைகளை பிணைத்திருக்கும் போது நம் மனமும், உடலும் அமைதி அடைகிறது, மேலும் மூளை நரம்புகளில் காணப்படும் வலிகள் குறைந்து ஒரு வலி நிவாரணி மருந்து சாப்பிட்டதற்கு இணையாக இது இருக்கிறது. தொடுதல் நம் மூளையை அமைதி படுத்துகிறது. ஒரு காணொளி உரையாடல் இதே அமைதியை கொடுப்பதற்கு நம் மூளை இன்னமும் கொஞ்சம் அதிகமாய் மெனக்கெடவேண்டியிருக்கிறது என்கிறார் ஜேம்ஸ் கோஆன் .    

இன்று உலகம் முழுவதும் மெய்நிகர் உலகில் எப்படி சமூகமாய் இயங்குவது என்று மனிதர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஜூம், பேஸ் டைம், ஸ்கேய்ப் மற்றும் பல தளங்களில் பேசுவது, விளையாட்டு தளங்களில் நண்பர்களுடன் விளையாடுவது , ஒரே நேரத்தில் ஒரே பாட்டிற்கு நடனம் ஆடுவது போன்றவை அதிகரித்திருக்கிறது. என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒரு மெய்நிகர் மது பார்ட்டிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இது போன்று தளங்களை கொண்டு நமது தனிமையையும், சமூக வாழ்வையும் மீட்டெடுக்க முயல்வது தோல்வியிலேயே முடியும். ஜேம்ஸ் கோஆன் கூறுகிறார் - "இது நம்மிடம் வேறுவிதமான அழுத்தங்களாக வெளிவரும், கோபப்படுவது அல்லது நோயுருவது போன்று வெளிப்படும். மனிதர்கள் சமூகத்தில் இயங்குவது என்பது  தவிர்க்க முடியாதது. சமூக தனிமை என்பது நம் அழிவு என்பது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக  நமது  பரிணாம வளர்ச்சி நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்"   

"இந்த கொள்ளை நோய் நமக்கு  சில நன்மைகளையும் செய்திருக்கிறது" என்கிறார் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ உளவியலாளர் ஆமி ரொக்கச். "கடந்த நூறாண்டுகளாக நம்முடைய வாழ்வு தொழில்நுட்பம் சார்ந்து பணம் சம்பாதித்தல் மற்றும் சொத்து சேர்த்தால் என்றே கழிந்துள்ளது. மனித உறவுகளை நாம் பேணுவதற்கு எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இப்போது தீடீரென்று நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளிவர முடியாத நிலையில், நாம் உளவியல்ரீதியாகவும், உயிரியல்ரீதியாகவும் வாழ்வதற்கான முக்கிய வாய்ப்பு, இந்த உறவுகளை மீட்டெடுப்பதில் இருக்கிறது" என்கிறார் அவர். இந்த ஊரடங்கில் நானும் பல வருடங்களாக தொடர்பில் இல்லாத பல நண்பர்களுடன் மீண்டும் தொடர்பில் இருக்கிறேன்.

ரொக்கச் மேலும் சொல்கையில் " இந்த தனிமை நாம் விரும்பி ஏற்று கொண்டதல்ல, எனவே அது இன்னமும் கடுமையானதாகவே தோன்றும். இந்த தனிமையின் நாட்கள் முடிவுற்று நாம் வெளி வரும் போது சமூகம் பெரிதாய் மாறிவிடப்போவதில்லை. மனிதர்களாகிய நாம் மிகவும் மெதுவாய் கற்றுக்கொள்பவர்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் "நான் சில நல்ல விஷயங்களை இந்த நாட்களில் செய்தேன்' என்று சொல்லுவோம் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு சமூகமாய் ஒன்றிணைந்து இருப்பதே நமது உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் பாதுகாப்பு என்பதை  உணர்ந்து விடுவோம் என்பதே என் நம்பிக்கை" . 

கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை - 1

சென்ற வாரம் வாசித்த இந்த நியூ யார்க்கர் கட்டுரையை எனக்கு தெரிந்த அளவில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். கொரோனாவால் ஏற்பட்டு கொண்டிருக்கும் உலகளவிலான  பொருளாதார மற்றும் உடல் நல பாதிப்புகள் மட்டுமன்றி - உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளை அலசும் ஒரு முயற்சியே இந்த மொழிபெயர்ப்பு.

கட்டுரையை ஆங்கிலத்திலேயே வாசிக்க இந்த இணைப்பை சுட்டவும். தமிழில் வாசிக்க தொடரவும்.

ஆசிரியர் குறிப்பு பெரும்பாலும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் பற்றி எழுதும் ராபின் ரைட், பத்திரிகை எழுத்திற்க்காக பல விருதுகளை பெற்றவர். பல்வேறு நாடுகளை பற்றி புத்தகங்களை எழுதியுள்ள அவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க பட்டவர். பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதியுள்ள அவரின் இந்த கட்டுரை "நியூ யார்க்கர்" பத்திரிகையில் வெளியானது.      

கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை


சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் என்பிசியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பீட்டர் அலெக்சாண்டர் ஒரு கேள்வி கேட்டார் - "இதுவரை அமெரிக்காவில் 200 பேர் இறந்துவிட்டார்கள். 14 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள். இன்னமும் பல லட்சம் பேர் இந்த வைரஸ் பற்றிய பயத்தில் தினமும் இருக்கிறார்கள். இந்த நாட்டின் ஜனாதிபதியாக இந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" . டிரம்ப்பின் பதில் கோபமாக வந்தது "இந்த கேள்வியை கேட்கும் உங்களை நான் ஒரு பத்திரிக்கையாளராகவே நினைக்கவில்லை. அமெரிக்க மக்களுக்கு ஒரு தவறான செய்தியை நீங்கள் சொல்கிறீர்கள்.".

கொரோனா வைரஸ் பரவிய முதல் பல வாரங்கள் டிரம்ப் அது பற்றி எதுவும் தெரியாமலேயே இருந்தார். அதன் தீவிரம் உணர்ந்து, அமெரிக்கா முழுவதும் ஸ்தம்பித்து நின்ற, பொருளாதாரம் அடுத்து என்ன என்று தெரியாது நின்றபல லட்சம் அமெரிக்கர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொல்ல பட்ட வாரத்தில் அமெரிக்கர்களின் நடுவே நிலவிய மன அழுத்தத்தையும், பயத்தையும் புரிந்து கொள்ளாத தலைவராகவே டிரம்ப் இருந்தார். கடந்த ஓர்-இரு வாரங்களில் , மூன்றில் ஒரு அமெரிக்கர் தன் வீட்டில் இருக்க உத்தரவிட பட்டிருக்கிறது. ஏனையோருக்கு இயல்பு வாழ்க்கை என்பது உயரும் கொரோன வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கையால் நிலை குலைந்து விட்டிருக்கிறது.

எரிக் கார்ஸ்ட்டி, லாஸ் எங்கெல்ஸ் நகரின் மேயர், தன் நகரத்துவாசிகளை வீட்டிற்குள் இருக்க உத்தரவு இட்ட பொழுது இன்னமும் கொஞ்சம் மனிதத்தன்மையை காட்டினார் - "உங்களில் பலரும் பயத்துடனும், அழுகையுடனும் இருக்கிறீர்கள். இந்த கடுமையான நேரத்தில் அழுவதோ, பயம் கொள்வதோ தவறில்லை" என்றார். நியூ யார்க் மாநிலத்தின் ஆளுநர், அன்றெவ் கியூமோ அம்மாநிலத்தின் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக மற்றும் மன அழுத்தத்தை குறித்து "மக்கள் இன்று தங்கள் பொருளாதாரம் மற்றும் உடல் நலன் குறித்து பெரிய அளவில் கவலை கொண்டிருக்கின்றனர். இந்த அரசாங்கம் அந்த கவலைகளை தீர்க்க திட்டங்களை முன்னெடுக்க உள்ளது." என்று சொன்னதோடு நிற்காமல் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் போன்றோரை தனிமையினாலோ, அழுத்தத்தினாலோ கவலை கொண்டிருக்கும் மக்களுக்கு தன்னார்வ தொண்டாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.

நாடெங்கும் மாநில ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கை அறிவித்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நான் பல நரம்பியல் நிபுணர்கள், மன நல மருத்துவர்களிடம் இந்த புதிய வைரஸ் நம் உடம்புக்கு மட்டுமின்றி, மனநலத்திற்கும் கொண்டு வரும் பாதிப்பை பற்றி பேசினேன். கொரோன வைரஸ் நம்மை தாக்கும் இந்த கால கட்டம் எப்போதும் போலன்றி நம் உலகில் பலரும் தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம். அமெரிக்காவில் 1960களில் இருந்து இந்த போக்கு இரு மடங்காக அதிகரித்து, இப்பொது 29 சதவிகித வீடுகளில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். மிகவும் அதிகமாய் ஸ்வீடனில் ஸ்டோக்ஹோல்ம் நகரில் இது அறுபது சதவிகிதமாக இருக்கிறது.
Edward Hopper - 'Automat' 
மனநல வல்லுநர்கள் தனியே வாசிப்பதற்கும், தனிமையில் இருப்பதுற்குமான வித்தியாசத்தை சுட்டி காட்டுகின்றனர். நானுமே தனியே வாழ்பவள்தான். எனக்கு என்று குடும்பம் எதுவும் இல்லை - அது குறித்து நான் பெரியதாய் யோசித்தும் இல்லை. இந்த வைரசால் நாம் தனிமை படுத்த படும் இந்த நாட்களிலேயே நான் தனிமையை உணர்கிறேன். என் நண்பர்களை பார்ப்பதற்கும், பேசுவதற்கும், கட்டி பிடித்து கொண்டாடுவதோ தடை செய்ய பட்ட இந்த நாட்களில் என் வாழ்வு அர்த்தமில்லாததாகவும், வெறும் உயிர் வாழ்வதாகவும் மட்டுமே தோன்றுகிறது.

"Cast Away" திரைப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் ஒரு வாலி பால் பந்துடன் தனியே ஒரு தீவில் நான்கு ஆண்டுகள் கழித்துவிட்டு நல்லபடியாக திரும்பி வருவார். ஆனால் விஞ்ஞானம், தனிமையினாலும், மன அழுத்தத்தினாலும் நம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறது. இவை இரண்டும் நல்ல ஆரோக்கியமான மனிதர்களிடமும் உயர் ரத்த அழுத்தத்தையும், அதிகமான இதய துடிப்பினையும் ஏற்படுத்தி அவர்களை நோயாளிகளாக்க கூடியது. நீண்ட தனிமை மரணத்தை சீக்கிரமாக கொண்டுவரும்.

2015இல் பிரிகம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் நிபுணரும், மனோதத்துவருமான ஜூலியன் ஹோல்ட்-லுண்ஸ்டாட் , சமூக தனிமை, தனிமை மற்றும் தனித்து வாழ்தல், குறித்து 3.4 மில்லியன் நபர்களிடம், எழுபது ஆய்வுகள் நடத்தி அதன் முடிவுகளை பதிப்பித்துவுள்ளார். இன்றைய சமூக தனிமை நாட்களில் இந்த முடிவுகள் முக்கியமானவை. இதன் படி, தனிமை  26 சதவிகதமும், சமூக தனிமை 29 சதவிகிதமும், தனியே வாழ்வது 32 சதவிகிதமும் இறப்பை துரித படுத்துகிறது - இது வயது, பால் , கலாச்சாரம், இடம் என எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை.

"இந்த சதவிகிதங்கள் எல்லாம் ஒரு நீண்ட காலத்தில் எடுக்கப்பட்டவை" என்று கூறும் ஹோல்ட்-லுண்ட்ஸ்டாட் ,"நாம் இப்போது பார்க்கும் இந்த சமூக தனிமைப்படுத்துதல் நமது இயல்பு வாழ்க்கையை குலைத்து போட்டிருக்கிறது. இது தாற்காலிகமானதாக இருக்கும் என்றே நம்புவோம்". இந்த நிலையின் தாக்கம் இந்த கொரோனா காலகட்டத்தையும் தாண்டி இருக்கும் என்கிறார் இவர். உதாரணமாக , பொது நீர் நிலைகள் கெட்டு போய் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் போது , பெரும்பாலான மக்கள் அதை உடனே நம்புவதில்லை. இன்னொரு மனோதத்துவ நிபுணர் இரண்டாம் உலக போரில் பாதிக்க பட்ட யூதர்களை உதாரணமாக சொல்கிறார். போர் முடிந்து பல வருடங்களுக்கு பின்னும், பொருளாதாரத்தில் வசதியான பின்னரும் அவர்கள் எப்படி உணவு பொருட்களை சேகரித்து கொண்டே இருந்தனர் என்று கூறுகிறார். அந்த கடுமையான காலகட்டத்தின் நினைவுகளை அவர்களால் மறக்க முடியவில்லை.

(பகுதி 2இல் தொடரும்)

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...