Paico Classics 10 - Kidnapped (Tamil) - கிட்னாப்டு

'கிட்னாப்டு'. ஆர்.எல். ஸ்டீவென்சனின் இன்னுமொரு சாகச கதை. எட்டாம் வகுப்பில் ஆங்கில துணைப் பாடமாய் 'Treasure Island' படித்ததுதான் முதல் அறிமுகம். அந்த புத்தகத்தில் இருந்த அந்த தீவின் வரைபடத்தை பார்த்து எத்தனையோ நாட்கள் நானும் ஒரு புதையல் எடுக்க (என் கற்பனையில்) கிளம்பி இருக்கிறேன். அந்த சாகச கதைகளின் வரிசையில் இன்னுமொன்று. தன் சித்தப்பாவால் ஏமாற்றப்பட்டு ஒரு கப்பலில் கடத்தப்படும் சிறுவன் எப்படி திரும்பி வந்து பழி வாங்குகிறான் என்ற கதை. இப்போதும் 5 பாடல்கள் சண்டையுடன் நல்ல மசாலா படமாக இருக்கும்.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 9 - Return of the Native (Tamil) - ரிடர்ன் ஆப் தி நேடிவ்

தாமஸ் ஹார்டி. பள்ளி நாட்களில் படித்த 'Mayor of Casterbridge' மூலம் அறிமுகம் ஆனவர். அப்போதே அந்த கதை கொஞ்சமும் புரியவில்லை. ஹார்டியின் கதைகள் வெறும் காதல் கதைகளாய் மட்டும் இல்லாமல் மனிதர்களின் தடுமாற்றங்களையும் அதன் மூலமாக ஏற்படும் அவலங்களையும் காட்டுவதால் அந்த கதைகளின் நுணுக்கம் புரிய வேண்டி இருந்தது. கல்லூரியில் 'Woodlanders' படித்த போது அதன் immorality அதிர வைத்தது. தமிழ் உலகின் நன்மை x தீமை பேதங்கள் மறைந்து எல்லா விஷயங்களையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்த நாட்கள். ஹார்டியும் டி.ஹச்.லாரன்சும் இந்த கேள்விகளை இன்னமும் அதிகமாக்கினார்கள்.

ரிடர்ன் ஆப் தி நேடிவ். இன்னுமொரு முக்கோண காதல் கதை. ஆனால் இங்கே காதல் என்பது வெறும் ஈர்ப்புகளால் மட்டும் அல்லாமல் சமுக நிலை, பணம் என பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு வருகிறது. கல்யாணம் ஆன/ஆகாத என்ற பேதமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. பல குறியீடுகளையும், கேள்விகளையும் கொண்ட கதை. முதலில் 'பைகோ'வில் படித்தாலும் இதை முழுமையாக புரிந்து கொள்ள வருடங்களாயிற்று. இப்போதும் ஒரு சலனம் ஏற்படாமல் இதை படிக்க முடியவில்லை.

இதை cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...