
"வெட்டுபுலி" தீப்பெட்டியில் இருக்கும் படம் தனதுதாத்தாவிடையது என்று தெரியவந்ததும் கதை நாயகன் அந்தகதையை தேடி புறப்படுகிறான். தாத்தா சிறுத்தையை அடித்தகதைக்காக ஊத்துகோட்டையில் 1934 ல் ஆரம்பிக்கும் கதை நியூயோர்கில் 2010 ல் முடிகிறது.
வழியில் நாயகனின் குடும்ப கதையும் அதன் ஊடே வட தமிழகத்தின், திராவிடஇயக்கத்தின் வரலாறும் சொல்லப்படுகிறது. பெரியாரால் நடு சந்திக்கு கொண்டு வரப்பட்டு இன்றும் தீராத விவாதங்களோடு இருக்கும் 'சாதி' ஒரு முக்கிய பாத்திரம். திராவிட அரசியலால் பொது வாழ்விற்கு வந்த ஒரு தலைமுறை எப்படி disillusion ஆகிறது என்பது ஒரு கிளைக்கதையாக விரிகிறது.
அன்பழகன், பெரியார், அண்ணாதுரை, கலைஞர் என எல்லோரம் கதையின்போக்கில் வருகிறார்கள். சினிமா பேசாதிருந்து மெதுவாய் அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடிக்கிறது.
தாழ்ந்த சாதி பெண்ணை விரும்பியதால் ஊரை விட்டு ஓடிப் போன லக்ஷ்மணரெட்டியின் பேரன் ஒரு தாழ்ந்த சாதி பெண்ணை மணமுடிக்கிறான். தியாகராசன் திராவிட அரசியலை வெறுத்து பாண்டி 'அம்மா' பக்தனகிறான்.
கதை சின்னா ரெட்டியின் குடும்பத்தின் பல கிளைகளையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் காலமும் முன்னும் பின்னுமாய் போகிறது. ஆனால் ஒருநேர்த்தியான கதையை சொல்லப்படுகிறது.
என்னை பொறுத்தவரை வித்தியாசமான முயற்சி. அவ்வளவே.
அடுத்து Ramachandra Guha's 'India after Gandhi'. புத்தகத்தின் அளவை பார்க்கும் போது இன்னும் ஒரு மாதமாவது ஆகும் படித்து முடிக்க.
பி. கு.
இன்றைய 'Sun Music'ல் ஒரு உரையாடல்.
compere - ஹலோ, வணக்கம். உங்களுக்கு இன்றைய மே தின வாழ்த்துக்கள்.
caller - ஆமா மேடம், உங்களுக்கும் 'தல' பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
compere - இல்லைங்க, இன்னைக்கு உழைப்பாளர் தினம். அந்த வாழ்த்துக்களைசொன்னேன்.
caller - அப்படியா, எதுக்கும் ஒரு அட்டகாசமான 'தல' பாட்டை போடுங்க.
இது போல ஒரு 10 -20 நிமிடங்களில் 2-3 பேர். எதற்கு இந்த 'உழைப்பாளர் தின' farce? பேசாமல் அடுத்த வருடத்தில் இருந்து மே 1 ஐ 'தல' பிறந்த நாளாககொண்டாடிவிட்டு போகலாம்.
2 comments:
நன்றி நண்பரே,
வெட்டுப்புலி நாவலுக்கு நீங்கள் எழுதியிருந்த விமர்சனம் சுருக்கமாகவும் நிறைவாகவும் இருந்தது.
-தமிழ்மகன்
www.tamilmagan.in
நன்றி..
Post a Comment