பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்

இரண்டொரு நாள்களுக்கு முன் பொழுது போகாமல் தளங்களில் அலைந்து கொண்டிருந்த போது, காஞ்சியில் இருக்கும் 'வைகுண்ட பெருமாள் கோயில்' பற்றி படித்தேன். பல முறை காஞ்சி சென்றிருந்தாலும் இந்த கோயில் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். கோயிலை விடவும் அதன் பிரகாரங்களில் உள்ள பல்லவ சிற்பங்களை பற்றிய வர்ணனைகள் இந்த கோயிலை உடனே பார்க்க தூண்டியது.

அதோடு கைலாசநாதரையும் ஒரு பார்வை பார்த்து விட முடிவு செய்து, இன்று காலை 7 மணி போல் காஞ்சி கிளம்பினேன்.

திரு பரமேச்வர விண்ணகரம் 

'திரு பரமேச்வர வின்னனகரம்' என்னும் 'வைகுண்ட பெருமாள் கோயிலை இன்று மெனக்கெட்டு போய் பார்க்காமல் வந்திருக்க வேண்டியது.

காஞ்சி பேருந்து நிலையத்தில் இறங்கி செல் போன் GPSஇல் 'வைகுண்ட பெருமாள் கோயிலை' 'வரதராஜ பெருமாள் கோயில்' என்று அடித்து அந்த வழியில் நடக்க ஆரம்பித்தேன். யாரிடமும் வழி கேக்காமல் நடந்ததால் 'வரதராஜ பெருமாள் கோயிலும் வந்தது.


கோயிலின் உள்ளே நுழைந்தவுடன்தான் இந்த கோயிலுக்கு பல முறை வந்திருப்பதால் இதுவாக இருக்க முடியாதே என்று செல் போனை பார்க்க நான் பண்ணிய தவறு புரிந்தது. பிறகென்ன வந்தது வந்தாயிற்று என்று, கோயிலில் இருந்த நீண்ட வரிசையில் நின்று வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். இந்த முறை ஒரு ஆட்டோ பிடித்து ஒரு வழியாக 'வைகுண்ட பெருமாளை கண்டேன்.

இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட இந்த கோயில் நான் சென்ற பொது இரண்டு கொரியர்கள் தவிர யாரும் இல்லாமல் இருந்தது. ஒரு ASI கைடு அந்த இரு கொரியர்களுக்கும் கோயிலின் எல்லா சிற்ப்பங்களையும் 'சிவா/விஷ்ணு/பல்லவ ராஜா' என்று மூன்று வகைபடுத்தி விளக்கி கொண்டிருந்தார்.

கோயிலின் சுற்று பிரகாரத்திலும்  கோயில் தூண்களும் பல்லவர்களின் சிற்ப திறமைக்கு மௌன சான்றாய் நின்று கொண்டிருகின்றன. சோழ சிற்ப்பங்களை போல் இல்லாமல் பெரிதும் சிதைந்தே இருக்கின்றன (சோழர்களை விட ஒரு 200-300 வருடங்கள் முந்தைய காலத்தை சேர்ந்தவை).

சிதைந்த சிற்பங்களுக்கெல்லாம் முகமும், பொலிவும் கொடுக்கும் வேலையில் ASI இருக்கிறது போலும். இதற்க்கு அந்த சிற்ப்பங்களை எல்லாம் சிதைத்தே இருக்கலாம். உலகில் எங்கும் ஒரு கலாச்சார சின்னத்தில் சரி செய்யும் வேலையை யாரும் செய்வதில்லை. பார்க்க பார்க்க அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இந்த சுற்று சுவர்களில் பல்லவ மன்னர்களின் முடி சூட்டும் சிற்ப்பங்கள் இருப்பதாய் படித்து தான் சென்றேன். சில சிற்ப்பங்களை கண்டறிய முடிந்தாலும் தெளிவாக அறிய முடியவில்லை.

 பல்லவ சிற்பங்களில் உள்ள ஆண்/பெண் இருவருக்கும் இருக்கும் தலை மகுடம்/அலங்காரம்தான் என்னை கவர்ந்தது. இவ்வளவு பெரிய மகுடத்தை எப்படி எல்லா நேரமும் வைத்திருக்க முடியும் என்றே தோன்றியது. அதே போல் எல்லா சிற்ப்பங்களும் 'striking a pose' என்பது போல் ஒரு நளினத்துடன் இருந்தது.

'காஞ்சி புரத்து'



பலமுறை அஜந்தா சிற்ப்பங்கள் ஞாபகம் வந்தது. அதே போன்ற தலை அலங்காரங்கள், சாய்ந்த தலை, முக அமைப்பு, நளினம், பல்லவர்கள் படையெடுத்து அஜந்தா வரை சென்ற காரணத்தால் இருக்கலாம். இதே காரணம் 'சிவகாமியின் சபதத்தில்' வருகிறது.

பல்லவர்கள் சோழர்கள் அளவிற்கு romantisize பண்ண படவில்லை. 'பொன்னியின் செல்வன்' அளவிற்கு 'சிவகாமியின் சபதம்' விரும்பபடவில்லை. அதுவே இந்த கோயில்கள் சோழ கோயில்கள் அளவிற்கு பார்க்க படாததன் காரணமாக இருக்கலாம். மகேந்திர வர்மனும், நரசிம்ம வர்ம பல்லவனும், ராஜ சிம்மனும், ராஜ ராஜ சோழன் போன்று பரவலாக போற்ற படுவதில்லை என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கோயிலை விட்டு வர மனமின்றி எனது அடுத்த இலக்கான 'கைலாச நாதர் கோயிலுக்கு சென்றேன்.



1. பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் - மேலும் விவரங்களுக்கு --> http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg103/html/cg103t0701.htm

2. மேலும் படங்கள் --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5879718081929002737

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...