நேற்று மிஷ்கினின் பேட்டி ஒன்றை பார்க்க நேர்ந்தது. பாரதவாஜ் ரங்கனுடன் சினிமா பற்றிய ஒரு உரையாடல். பார்க்கும் போதே - தமிழ் கூறும் நல்லுலகம் - ஏன் மிஷ்கினை கொண்டாடுவதில்லை இன்று தோன்றியது.
மிஷ்கினின் படங்களை நான் கொஞ்சம் late ஆகத்தான் பார்க்க ஆரம்பித்தேன். அதிலும் இன்னமும் 'சித்திரம் பேசுதடி' போன்று ஒரு சில படங்கள் பார்க்கவில்லை. ஆனாலும் கடந்த 15 வருடங்களில் தமிழின் முக்கியமான இயக்குனர் மிஷ்கின் என்பது எனது கருத்து.
மிஷ்கினின் படங்கள் கதைகளை பொறுத்தவை அல்ல. கதை சொல்லலை பொறுத்தவை. அவரின் எல்லா படங்களுமே இரு முக்கியமான விஷயங்களை முன் வைக்கின்றன. ஒன்று, கதை சொல்லல். இரண்டு, அழகியல். எனக்கு பிடித்தமான மூன்று படங்களை எடுத்து கொள்கிறேன். ('யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' , 'பிசாசு')
மிஷ்கினின் கதை சொல்லுதல் என்பது ஒரு standard 3 act story யை ஒத்தது. படத்தின் முதல் frameயிலேயே கதைக்குள் நுழைந்து விடுவோம். ஆனால் அவரது கதை சொல்லும் விதம் இதுவரை தமிழ் இயக்குனர்கள் எவருக்கும் கை வராதது. சினிமா ஒரு காட்சி கலைவடிவம் என்பதை தமிழில் மிஷ்கினின் படங்களில் மட்டுமே உணர முடியும். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் மொத்த வசனங்களும் ஒரு இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் நிரம்பிவிடும். முழு படமும் காட்சிகளாலேயே நகன்று போகும். ஒரு திரைக்கதையில் ரசிகனையும் ஒரு பாகமாய் சேர்த்துக் கொண்டு அவனுக்கு ஒவ்வொன்றையும் விளக்காமல் நகர்த்துவது மிஷ்கினின் பாணி.
மிஷ்கின் அழகியலின் உச்சம் காட்டிய படம் 'பிசாசு'. அதன் முதல் சீன் வெட்டிக்கொண்டு செல்லும் shot வேகத்தில் படத்தின் கதை கிட்டத்தட்ட சொல்லி முடித்துவிடப்படும். அந்த shot களை unravel பண்ணுவதுதான் அந்த படத்தின் மீதி. அந்த படத்தின் எல்லா வண்ண குழப்பங்களும் அந்த இடத்தில் சொல்ல பட்டுவிடும். காட்சி படிமம் என்பது என்ன என்பதின் விளக்கம் இந்த ஒரு சீன்.
அது போலவே 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் மிஷ்கின் கல்லறை தோட்டத்தில் கதை சொல்லும் சீன். ஒரு 4-5 நிமிடங்கள் கேமரா ஒரே ஷாட்டில் மெழுகுவர்த்தியின் நிழலின் ஆட்டம் தவிர ஏதுமின்றி இருக்கும்.
மிஷ்கினின் அழகியல் என்பது அவரது scene composition மற்றும் stagingஇல் உள்ளது. 'யுத்தம் செய்'யில் உள்ள சண்டை காட்சியாகட்டும், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' இல் வரும் கல்லறை தோட்ட காட்சிகள் எல்லாமே அவற்றின் செய்நேர்த்தியை சொல்லும். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொருவரும் நிற்கும் , நடக்கும் விதங்கள் எல்லாம் அந்த காட்சியை ஒரு ஓவியம் போல நிலை நிறுத்தும்.
கிட்டத்தட்ட தரையோடு இருக்கும் கால்கள் shots மிஷ்கினின் ஆரம்ப கட்ட படங்களில் காணலாம். அது இப்போது low angle shots ஆக மாறிவிட்டாலும் ஒரு காட்சியின் வேகத்தை இந்த shot நிர்ணயிக்கிறது.
இதுவெல்லாம் technical. மிஷ்கினின் திரை உலகம் விளிம்பு நிலை மக்களால் ஆனது. அவரது நாயகர்கள் எல்லாம் கொஞ்சம் தவறுகளோடு இருப்பவர்கள். சில நேரம் குற்ற உணர்ச்சியுடன் வாழ்க்கையை கடந்து செல்பவர்கள். கண் தெரியாதவர்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் என்றொரு உலகம். அவரின் மத்திய வர்க்க நாயகர்கள் இந்த உலகத்திற்குள் எட்டி பார்ப்பதுதான் பெரும்பாலான கதைகள். முதலில் சொல்லியது போல் மிஷ்கின் கதையை விட கதை சொல்லலில் expert. பெரும்பாலான இடஙக்ளில் பார்வையாளனை ஒரு விதமான suspenseஇல் வைத்து கொண்டே இடைவெளிகளை நிரப்பும் உத்தியில் கெட்டிக்காரர். இந்த அறிவுஜீவியான கதை சொல்லலை நிதானமாக நடத்துவதுதான் அவரின் படைப்புகள்.
இசை ஒரு முக்கியமான component இந்த படங்களில். அது இளையராஜாவோ கொரெல்லியோ ஒவ்வொரு காட்சியிலும் அனாவஸ்யமான இசை ஒரு இடத்திலும் இருக்காது. மிஷ்கின் சொல்லியது போல ஒரு சிம்பொனி movement போல காட்சிகளும் இசையும் ஒத்து போகும். அதிலும் எல்லா படங்களிலும் வயலின் - பீத்தோவனின் தாக்கத்தில் - மற்றும் பியானோ notes கேட்பதற்காகவே பார்க்கலாம். காட்சிகளின் எழிலை கூட்டி காட்டுவது இது.
இறுதியாக, மிஷ்கின் கொரியா, ஜப்பான் திரைப்படங்களின் பாதிப்பில் இருப்பவர் என்பது ஒரு குற்றச்சாட்டு. அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் இறுதி காட்சி கத்தி சண்டை ஜப்பானிய முறையில் இருக்கும். இது போல பல காட்சிகள் சொல்லலாம்.
மிஷ்கினின் இந்த மூன்று படங்களை நான் எடுத்துக்கொண்டது அவரின் commercial compromise இந்த மூன்று படங்களிலும் இருக்காது. ஒரு திரை படத்தை compose பண்ணியதில் அவர் அடைந்த உச்சங்கள் என்று கூறலாம். commercial படங்களில் எனக்கு பிடித்தது 'துப்பறிவாளன்'. அது இன்னொரு நாளைக்கு.

No comments:
Post a Comment