சென்ற வாரம் வாசித்த இந்த நியூ யார்க்கர் கட்டுரையை எனக்கு தெரிந்த அளவில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். கொரோனாவால் ஏற்பட்டு கொண்டிருக்கும் உலகளவிலான பொருளாதார மற்றும் உடல் நல பாதிப்புகள் மட்டுமன்றி - உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளை அலசும் ஒரு முயற்சியே இந்த மொழிபெயர்ப்பு.
கட்டுரையை ஆங்கிலத்திலேயே வாசிக்க இந்த இணைப்பை சுட்டவும். தமிழில் வாசிக்க தொடரவும்.
ஆசிரியர் குறிப்பு - பெரும்பாலும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் பற்றி எழுதும் ராபின் ரைட், பத்திரிகை எழுத்திற்க்காக பல விருதுகளை பெற்றவர். பல்வேறு நாடுகளை பற்றி புத்தகங்களை எழுதியுள்ள அவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க பட்டவர். பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதியுள்ள அவரின் இந்த கட்டுரை "நியூ யார்க்கர்" பத்திரிகையில் வெளியானது.
கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை
மனநல வல்லுநர்கள் தனியே வாசிப்பதற்கும்,
தனிமையில் இருப்பதுற்குமான வித்தியாசத்தை சுட்டி காட்டுகின்றனர்.
நானுமே தனியே வாழ்பவள்தான். எனக்கு என்று குடும்பம் எதுவும் இல்லை - அது குறித்து
நான் பெரியதாய் யோசித்தும் இல்லை. இந்த வைரசால் நாம் தனிமை படுத்த படும் இந்த
நாட்களிலேயே நான் தனிமையை உணர்கிறேன். என் நண்பர்களை பார்ப்பதற்கும், பேசுவதற்கும், கட்டி பிடித்து கொண்டாடுவதோ தடை செய்ய பட்ட
இந்த நாட்களில் என் வாழ்வு அர்த்தமில்லாததாகவும், வெறும்
உயிர் வாழ்வதாகவும் மட்டுமே தோன்றுகிறது.
"இந்த சதவிகிதங்கள் எல்லாம் ஒரு நீண்ட காலத்தில் எடுக்கப்பட்டவை" என்று கூறும் ஹோல்ட்-லுண்ட்ஸ்டாட் ,"நாம் இப்போது பார்க்கும் இந்த சமூக தனிமைப்படுத்துதல் நமது இயல்பு வாழ்க்கையை குலைத்து போட்டிருக்கிறது. இது தாற்காலிகமானதாக இருக்கும் என்றே நம்புவோம்". இந்த நிலையின் தாக்கம் இந்த கொரோனா காலகட்டத்தையும் தாண்டி இருக்கும் என்கிறார் இவர். உதாரணமாக , பொது நீர் நிலைகள் கெட்டு போய் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் போது , பெரும்பாலான மக்கள் அதை உடனே நம்புவதில்லை. இன்னொரு மனோதத்துவ நிபுணர் இரண்டாம் உலக போரில் பாதிக்க பட்ட யூதர்களை உதாரணமாக சொல்கிறார். போர் முடிந்து பல வருடங்களுக்கு பின்னும், பொருளாதாரத்தில் வசதியான பின்னரும் அவர்கள் எப்படி உணவு பொருட்களை சேகரித்து கொண்டே இருந்தனர் என்று கூறுகிறார். அந்த கடுமையான காலகட்டத்தின் நினைவுகளை அவர்களால் மறக்க முடியவில்லை.
(பகுதி 2இல் தொடரும்)
கட்டுரையை ஆங்கிலத்திலேயே வாசிக்க இந்த இணைப்பை சுட்டவும். தமிழில் வாசிக்க தொடரவும்.
ஆசிரியர் குறிப்பு - பெரும்பாலும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் பற்றி எழுதும் ராபின் ரைட், பத்திரிகை எழுத்திற்க்காக பல விருதுகளை பெற்றவர். பல்வேறு நாடுகளை பற்றி புத்தகங்களை எழுதியுள்ள அவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க பட்டவர். பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதியுள்ள அவரின் இந்த கட்டுரை "நியூ யார்க்கர்" பத்திரிகையில் வெளியானது.
கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை
சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில்
நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் என்பிசியை
சேர்ந்த பத்திரிக்கையாளர் பீட்டர் அலெக்சாண்டர் ஒரு கேள்வி கேட்டார் -
"இதுவரை அமெரிக்காவில் 200 பேர் இறந்துவிட்டார்கள். 14 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.
இன்னமும் பல லட்சம் பேர் இந்த வைரஸ் பற்றிய பயத்தில் தினமும் இருக்கிறார்கள். இந்த
நாட்டின் ஜனாதிபதியாக இந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?" . டிரம்ப்பின் பதில் கோபமாக வந்தது "இந்த
கேள்வியை கேட்கும் உங்களை நான் ஒரு பத்திரிக்கையாளராகவே நினைக்கவில்லை. அமெரிக்க
மக்களுக்கு ஒரு தவறான செய்தியை நீங்கள் சொல்கிறீர்கள்.".
கொரோனா வைரஸ் பரவிய முதல் பல வாரங்கள் டிரம்ப்
அது பற்றி எதுவும் தெரியாமலேயே இருந்தார். அதன் தீவிரம் உணர்ந்து, அமெரிக்கா முழுவதும் ஸ்தம்பித்து நின்ற, பொருளாதாரம்
அடுத்து என்ன என்று தெரியாது நின்ற,
பல லட்சம் அமெரிக்கர்கள் தங்கள் வீட்டை விட்டு
வெளியே வரவேண்டாம் என்று சொல்ல பட்ட வாரத்தில் அமெரிக்கர்களின் நடுவே நிலவிய மன
அழுத்தத்தையும், பயத்தையும் புரிந்து கொள்ளாத தலைவராகவே டிரம்ப்
இருந்தார். கடந்த ஓர்-இரு வாரங்களில் , மூன்றில் ஒரு
அமெரிக்கர் தன் வீட்டில் இருக்க உத்தரவிட பட்டிருக்கிறது. ஏனையோருக்கு இயல்பு
வாழ்க்கை என்பது உயரும் கொரோன வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கையால் நிலை குலைந்து
விட்டிருக்கிறது.
எரிக் கார்ஸ்ட்டி, லாஸ்
எங்கெல்ஸ் நகரின் மேயர், தன் நகரத்துவாசிகளை வீட்டிற்குள் இருக்க
உத்தரவு இட்ட பொழுது இன்னமும் கொஞ்சம் மனிதத்தன்மையை காட்டினார் - "உங்களில்
பலரும் பயத்துடனும், அழுகையுடனும் இருக்கிறீர்கள். இந்த கடுமையான
நேரத்தில் அழுவதோ, பயம் கொள்வதோ தவறில்லை" என்றார்.
நியூ யார்க் மாநிலத்தின் ஆளுநர், அன்றெவ் கியூமோ அம்மாநிலத்தின் மக்கள்
எதிர்கொண்டிருக்கும் சமூக மற்றும் மன அழுத்தத்தை குறித்து "மக்கள் இன்று
தங்கள் பொருளாதாரம் மற்றும் உடல் நலன் குறித்து பெரிய அளவில் கவலை
கொண்டிருக்கின்றனர். இந்த அரசாங்கம் அந்த கவலைகளை தீர்க்க திட்டங்களை முன்னெடுக்க
உள்ளது." என்று சொன்னதோடு நிற்காமல் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள மன நல
மருத்துவர்கள், ஆலோசகர்கள் போன்றோரை தனிமையினாலோ, அழுத்தத்தினாலோ கவலை கொண்டிருக்கும் மக்களுக்கு தன்னார்வ தொண்டாற்ற
அழைப்பும் விடுத்துள்ளார்.
நாடெங்கும் மாநில ஆளுநர்கள் தங்கள்
மாநிலங்களில் ஊரடங்கை அறிவித்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நான் பல நரம்பியல் நிபுணர்கள், மன
நல மருத்துவர்களிடம் இந்த புதிய வைரஸ் நம் உடம்புக்கு மட்டுமின்றி, மனநலத்திற்கும் கொண்டு வரும் பாதிப்பை பற்றி பேசினேன். கொரோன வைரஸ்
நம்மை தாக்கும் இந்த கால கட்டம் எப்போதும் போலன்றி நம் உலகில் பலரும் தனியே
வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம். அமெரிக்காவில் 1960களில்
இருந்து இந்த போக்கு இரு மடங்காக அதிகரித்து, இப்பொது
29 சதவிகித வீடுகளில் ஒருவர் மட்டுமே வசித்து
வருகிறார். மிகவும் அதிகமாய் ஸ்வீடனில் ஸ்டோக்ஹோல்ம் நகரில் இது அறுபது சதவிகிதமாக
இருக்கிறது.
Edward Hopper - 'Automat' |
"Cast Away" திரைப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் ஒரு வாலி பால்
பந்துடன் தனியே ஒரு தீவில் நான்கு ஆண்டுகள் கழித்துவிட்டு நல்லபடியாக திரும்பி
வருவார். ஆனால் விஞ்ஞானம், தனிமையினாலும், மன
அழுத்தத்தினாலும் நம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறது. இவை இரண்டும் நல்ல
ஆரோக்கியமான மனிதர்களிடமும் உயர் ரத்த அழுத்தத்தையும், அதிகமான
இதய துடிப்பினையும் ஏற்படுத்தி அவர்களை நோயாளிகளாக்க கூடியது. நீண்ட தனிமை மரணத்தை
சீக்கிரமாக கொண்டுவரும்.
2015இல் பிரிகம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த
நரம்பியல் நிபுணரும், மனோதத்துவருமான ஜூலியன் ஹோல்ட்-லுண்ஸ்டாட் ,
சமூக தனிமை, தனிமை மற்றும் தனித்து வாழ்தல், குறித்து 3.4 மில்லியன் நபர்களிடம், எழுபது
ஆய்வுகள் நடத்தி அதன் முடிவுகளை பதிப்பித்துவுள்ளார். இன்றைய சமூக தனிமை நாட்களில்
இந்த முடிவுகள் முக்கியமானவை. இதன் படி, தனிமை 26 சதவிகதமும், சமூக
தனிமை 29 சதவிகிதமும், தனியே வாழ்வது 32 சதவிகிதமும்
இறப்பை துரித படுத்துகிறது - இது வயது, பால் , கலாச்சாரம், இடம் என எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை.
"இந்த சதவிகிதங்கள் எல்லாம் ஒரு நீண்ட காலத்தில் எடுக்கப்பட்டவை" என்று கூறும் ஹோல்ட்-லுண்ட்ஸ்டாட் ,"நாம் இப்போது பார்க்கும் இந்த சமூக தனிமைப்படுத்துதல் நமது இயல்பு வாழ்க்கையை குலைத்து போட்டிருக்கிறது. இது தாற்காலிகமானதாக இருக்கும் என்றே நம்புவோம்". இந்த நிலையின் தாக்கம் இந்த கொரோனா காலகட்டத்தையும் தாண்டி இருக்கும் என்கிறார் இவர். உதாரணமாக , பொது நீர் நிலைகள் கெட்டு போய் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் போது , பெரும்பாலான மக்கள் அதை உடனே நம்புவதில்லை. இன்னொரு மனோதத்துவ நிபுணர் இரண்டாம் உலக போரில் பாதிக்க பட்ட யூதர்களை உதாரணமாக சொல்கிறார். போர் முடிந்து பல வருடங்களுக்கு பின்னும், பொருளாதாரத்தில் வசதியான பின்னரும் அவர்கள் எப்படி உணவு பொருட்களை சேகரித்து கொண்டே இருந்தனர் என்று கூறுகிறார். அந்த கடுமையான காலகட்டத்தின் நினைவுகளை அவர்களால் மறக்க முடியவில்லை.
(பகுதி 2இல் தொடரும்)
No comments:
Post a Comment