Showing posts with label வானதி. Show all posts
Showing posts with label வானதி. Show all posts

வானதி

வானதி : அப்பா, நான் என் பெயரை மாத்த போறேன்?
நான் : ஏன்டா?
வானதி: எனக்கு Ninja hattori தான் பிடிக்கும்.அதன் என் பெயரை 'Ninja Hattori' னு மாத்த போறேன்.
நான் : அப்பா வச்ச பேரு பிடிக்கலையா உனக்கு?
வானதி : ம்ம்ம்.. ஆமா அப்ப என் பேரு இனிமே வானதி அபினவ் நிஞ்சா ஹட்டோரின்னு வச்சுக்கலாமா?
நான்: அப்போ Barbie கோபிச்சு கிடுவளே?
வானதி : ஆமா அப்போ என் பேரு ' கி கூ வானதி அபினவ் ஹட்டோரி பார்பி'ன்னு வச்சுகவா?
நான்:ஆமா, இப்போதான் நல்லா இருக்கு.

*வானதி எப்போதும் அவளை 'கா கி கூ' 'கி கா கூ' என்று refer பண்ணி கொள்வாள்.
----------
சிபி எப்போதும் ஒரு set of rules கொடுத்துவிட்டால் அதற்குள் இருந்து கொள்வான். அதை மீற வேண்டும் என்றோ, follow பண்ண தேவையில்லை என்றோ அவனுக்கு தெரியாது. எனவே அவனை வளர்ப்பது கொஞ்சம் எளிதாய் இருந்தது.

வானதி நேர் எதிர். எப்படி அந்த rules வளைக்கலாம், சுற்று வழி உண்டா என்று அவள் யோசித்து, அதை மீறுவதற்கு நியாயங்கள் கற்பிப்பாள்.வானதியும் சிபியும் 'global art' வகுப்புகள் போவார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு விஷயம் நடக்கும். கொண்டு போகும் snacks வகுப்பு நேரத்தில் சாப்பிட கூடாது என்று ஆசிரியை சொன்னால், வானதி மேஜைக்கு கீழே குனிந்து கொண்டு சாப்பிடுகிறாள் என்று சிபி சொல்லும் போது இவள் ஒரு சிரிப்புடன் அதை தாண்டி போய் விடுகிறாள்.

பள்ளியில் பார்க்காமல் one, two, three எழுத சொன்னால் அதை பக்கத்துக்கு பெண்ணிடம் verify பண்ணி எழுதுவிட்டு அதை அவள் அம்மாவிடம் சொல்லுகிறாள்.

-----
தினமும் இரவு தூங்கும் போது நான், சிபி, வானதி மூன்று பேரும் ஒவ்வொரு கதை சொல்லுவோம்.

அது போல் நேற்று சொல்லும் போது, சிபி 'Ariel - the mermaid ' கதை சொன்னான். 

அடுத்து வானதி சொல்ல ஆரம்பித்தாள்
"ஒரு ஊருல ஒரு rich man இருந்தான்.
அந்த ஊருல நிறைய பேர் இருந்தாங்க. ஆனா அவங்க எல்லாம் poor.
அவங்க எல்லாம் ரொம்ப வேலை பார்த்தாங்க.
ஆனாலும் அவங்க poorஆ இருந்தாங்க.
அந்த rich man மட்டும் rich ஆகிட்டே இருந்தான்.

அப்போ கிருஷ்ணா இத பார்த்தான், அவனுக்கு இது பிடிக்கலை.
so நேரா அந்த rich man  கிட்ட போனான். அவன்கிட்ட இருந்த rupees , gold எல்லாத்தையும் எடுத்து எல்லா poor people கிட்டயும் கொடுத்தான்.
இப்போ அந்த ஊர்ல எல்லோரும் rich ஆகிட்டாங்க. அப்புறம் happyஆ இருந்தாங்க" 

இதுதான் அவள் சொன்ன கதை. கிருஷ்ணா ஒரு deus ex machina மாதிரி. கதை தடை பட்டால் உடனே வந்து சரி செய்து விடுவார்.
அது இருக்கட்டும், இந்த கதையின் அரசியல் எனக்கு மட்டும் தோன்றுகிறதா இல்லை உங்களுக்குமா?

But now I know which side of the political spectrum she is going to be.

கொடும்பாளூர் வானதி

சென்ற வாரம், மதுரைக்கு காரில் சென்று இருந்தோம். செல்லும் பொழுதே, விராலி மலைக்கு அருகில் கொடும்பாளூர் செல்லும் வழிகாட்டி ஒன்று பார்த்தேன். நேற்று அங்கிருந்து திரும்பும் பொழுது, கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

மதுரையில்
இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலை 45B இல் இருக்கிறது 'கொடும்பாளூர் சத்திரம்' என்னும் ஒரு சிறு கிராமம். ந்த கிராமத்தின் வழியே புதுகோட்டை செல்லும் வழியில் ஒரு 2 கிலோமீட்டர் சென்றால் வருகிறது 'கொடும்பாளூர்' கிராமம். ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவிற்கே உளள ஒரு பாதை, சி குடிசை வீடுகள் பாதையை ஒட்டி செல்லும் ஒரு கால்வாய், புதிதாய் விதைக்கப்பட்ட வயல்கள், இவற்றின் முடிவில் உள்ளது 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 'மூவர் கோவில்'.

பூதி விக்ரமகேசரியின் வரலாறு சொல்லும் கல்வெட்டு
இன்றைய கொடும்பாளூர் கிராமம் 9 ம் நூற்றாண்டில் இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி என்பவரால் ஆளபபட்டு வந்த ஒரு சிற்றரசு. இந்த பூதி விக்கிரமகேசரி முதலாம் பராந்தக சோழனின் அதிகாரத்தில் சோழ அரசில் பல விகளும் வகித்து வந்தார். அவர் எழுப்பி 'மூவர் கோவில்' இன்றைய கொடும்பாளூர் கிராமத்தில் வயல்களுக்கு நடுவில் கடந்து போன சரித்திரத்தின் நினைவாக நின்று கொண்டு இருக்கிறது. பூதி விக்கிரமகேசரி மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் நினைவாய் மூன்று சிறு கோவில்களாக எழுப்பப்பட்ட இந்த கோவிலில் இன்று இரண்டு மட்டுமே முழுமையாய் நின்று கொண்டு இருக்கிறது. மூன்றாவது கோவிலின் அடித்தளம் மட்டும் இருக்கிறது. கோவிலின் பிரகாரம், சுற்று கோவில்கள், கொடி கம்பம், சிலைகள் என்று எதுவும் இல்லை. கழ்வில் கிடைத்த சிலைகளும் இப்போது திருச்சி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
சோழர் வரலாறு, கொடும்பாளூர் என எல்லாவற்றையும் விட என்னை இந்த கோவிலும் கிராமமும் இழுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இருக்குவேள் பூதி விக்ரமகேசரியின் மகள் வானமாதேவி என்ற வானதி. இந்த வானதிதான் ராஜ ராஜ சோழனை மணந்து சோழ பேரரசுக்கு பட்டத்து ராணி ஆனவள். கல்கியின் 'பொன்னியின் செல்வனின்' கதாநாயகியாக வருவதும் இதே வானதிதான். என் மகளுக்கு பெயர் வைக்க காரணமாக இருந்ததும் அதே வானதிதான். அந்த வானதி இளவரசியாய் இருந்த இடத்தை எங்கள் வீட்டு இளவரசி பார்க்க வேண்டாமா?செல்லும் பாதை கொஞ்சம் கரடு முரடாய் இருந்தாலும் மூவர் கோவில் ஒரு பார்க்க வேண்டிய இடமே. கோவிலின் உள்ளே உள்ள வெற்று வெளிதான் தஞ்சை கோவிலின் ஆகாச லிங்கத்தின் முன்னோடி என்றார் இந்த இடத்தின் காப்பாளர். ஏனைய சோழர் கால சிற்ப நுட்பங்கள் பிட்சாடனர், லிங்கம் முதலியவும் காண கிடைகின்றது.கொடும்பாளூர் பெயர் காரணத்தை ஒட்டி அவ்வையின் சாபமாக ஒரு கர்ண பரம்பரை கதையும் கேட்டோம். எத்துனை அவ்வைகள் இருந்தால் இத்துனை கதைகள் கிடைக்கும் என்று எண்ணி கொண்டே சென்னை திரும்பினோம்.

மேலும் படங்கள் இங்கே
https://goo.gl/photos/DSsggYCUaowmgDjx5

இரு உரையாடல்கள்

நேற்றிரவு சிபியும் நானும் 'MasterChef Australia' பார்த்து கொண்டிருந்தோம். விளம்பர இடைவெளியில் 'Airtel' ன் புதிய விளம்பரம் ஒன்று .
ஒரு ஆணும் பெண்ணும் 'Airtel' 3G மூலமாக தொடர்பில் இருப்பதை அந்த விளம்பரம். இனி உரையாடல்.

சிபி - அப்பா, என்ன இவன் இவ்ளோ பொண்ணுங்களை லவ் பண்றான்?
நான் - ம்ம். நல்ல பாருடா, அது எல்லாமே ஒரே பொண்ணுதான்..
சிபி - இல்லையே, எனக்கு எல்லாம் வேற வேற பொண்ணுங்களத்தான் தெரியுது
நான் - ம்ம்..சரி, வேற வேற பொண்ணுங்களை லவ் பண்ணுன என்னடா problem?
சிபி - அது தப்புப்பா..ஒரு பெண்ணைத்தான் லவ் பண்ணனும்
நான் - அப்படின்னு யாரடா சொன்னது?
சிபி - எனக்கு தெரியும்பா
நான் - உனக்கு எப்படிடா தெரியும்?
சிபி - (தயக்கம்) தெரியும்பா
நான் - சும்மா சொல்லுடா.. எப்படி தெரியும்?
சிபி - you know Jehangir?
நான் - (ஹா.. இன்னொரு மொகல் கதைய) ஆமா.. Jehangir க்கு என்ன?
சிபி - he had 19 wives . Noorjehan was 20th .
நான் - சரி..அதனால?
சிபி - ஆனா Noorjehan first Jehangir க்கு 19 wives ன்னு தெரிஞ்சவுடனே..Sher Afghan கிட்ட போய்விட்டாள்.
நான் - இது என்னடா புது story .. Noorjehan தான Jehangir wife ?
சிபி - ஆமா.. ஆனா அதுக்கு முன்னாடி அவள் Sher Afghan கல்யாணம் பண்ணிட்டாள். அதுக்கு reason , Jehangir 19 wives வச்சி இருந்ததுதான். அவர் இறந்த அப்புறம் தான் Jehangir ஐ கல்யாணம் பண்ணிட்டாள். அதனால்தான் ஒரு பொண்ணதான் லவ் பண்ணனும்.
நான் - (as usual) இதை எல்லாம் எங்கடா படிக்கிறே?

அந்த கதையை அவன் எங்கே படித்தான் என்பதை விட, அதில் இருந்து அவன் derive பண்ணிய moral எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வபொழுது கொஞ்சம் moral story சொல்லுவதுண்டு. ஆனால் அதில் இருக்கும் moral ஐ அவர்களையே சொல்ல சொல்லுவேன். சில சமயம் interesting பதில்கள் வரும். மேற்சொன்ன உரையாடலுக்கு பிறகு நானும் சிபியும் எப்படி நமது ரசனைகள் ஒவ்வொரு வயதிலும் மாறும் என்று பேசி கொண்டிருந்தோம்.
இந்த உரையாடலை பற்றி ஜெயஸ்ரீயிடம் இன்று காலை சொல்லி கொண்டிருந்த போது "உங்களுக்கு Jehangir 19 wife கட்டி இருந்தால் நமக்கு ஏன் ஒரு wife மட்டும் போதும் என்று தோன்றும். அவன் என் பையன். அதுதான் இப்படி யோசிக்கிறான்" என்றாள். வாஸ்தவந்தான். எதற்கு நாம் ஒரு மனைவி போதும் என்கிறோம்?


------------------------------------------------


போன வாரம் நானும் சிபியும் PBS இன் 'The Voyage of the Corps of Discovery' பார்த்தோம். I am a big fan of Ken Burns and of couse the expedition is a stuff of interest to me. இந்த கதையை சிபிக்கு சில மாதங்களுக்கு முன்னே சொல்லி இருந்தாலும், இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Though I've watched it a couple of times, it is interesting to watch it along with Sibi. He was interested, involved and asked a ton of questions. Then I brought out the related book 'Undaunted Courage' by Stephen Ambrose (who talks in the course of the documentary as well) and we had loads of fun discussing Indians, looking at the pictures and of course, Sacagawea. Probably the most fun 2-3 hours I've spent with Sibi.


------------------------------------------------


நேற்று சாயங்காலம். வானதி 'Kidzee'ல் அவளது 'art and drawing' class போகும் நேரம். வழக்கம் போல், தூக்கம் வருகிறது என்று drama பண்ணி கொண்டிருந்தாள்.

ஜெ - பாப்பா class போனாதான் drawing எல்லாம் பண்ணலாம்.
வானதி - நான் தூங்க போறேன்.
ஜெ - போன வாரம் 'Rocket ' எல்லாம் class ல பண்ணினீங்கள, அது மாதிரி இந்த வாரம் பண்ண வேண்டாமா?
வானதி - அந்த 'rocket ' தான் trash ல போட்டாச்சே?
ஜெ - (taken back ) இல்ல பாப்பா, அது பத்திரமா இருக்கே
வானதி - ம்ம். எங்க காட்டுங்க?


ஜெ அதை தேடி காட்டிய பிறகு ஒரு மாதிரியாக கிளம்புகிறாள். ஆனால் அவள் பள்ளியிலும், Kidzee இலும் அவளது teachers எல்லோரும் சொல்லும் ஒன்று ' வானதி is a brilliant girl' .

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...