ஆப்பசைத்த குரங்கு

பட்டினத்தாருடனான அறிமுகம் 'பட்டினத்தார்' என்ற திரைப்படம் மூலம்ஏற்பட்டது. எங்கள் ஊர் (சிவகாசி) கொட்டகையில் பெஞ்சில் இருந்து பார்த்தபடம். பெரிய பாதிப்பு எதுவும் நினைவில்லை.

பின்னொரு நாள் எதோ ஒரு சுஜாதா கட்டுரையில் மேற்கோளை கண்டு பட்டினத்தார், சிவ வாக்கிய சித்தர் எல்லாம் தேடி படித்ததுண்டு. பல பாடல்கள் நினைவில்லை எனினும் சில தருணங்களில் நினைவில் வருவதுண்டு.

அவற்றில் ஒன்று இந்த ஆப்பசைத்த குரங்கு பாடல். அந்த படிமம் மனதில் பதிந்துவிட்டது மட்டும் காரணம் அல்ல. 'அர்த்தமுள்ள இந்து மதம்' இரண்டாம் பாகத்தில்கண்ணதாசன் மேற்கோள் காட்டுகிறார்.

"நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!"


கே.டானியலின் 'பஞ்சமர்' என்ற நாவலை படிக்க ஆரம்பித்தேன். முன்னுரையின்மூன்றாவது வரியில் ஆசிரியர் சொல்லுகிறார் "தனிமனித சுதந்திரத்தைஅழித்தொழித்து, எல்லாம் எல்லோருக்குமான சுதந்திரத்தை பெறுதல்' என்றமுனைப்புடன் எழுதி வருவதாக. புத்தகத்தை மூடி வைத்து விட்டு 'கட்டாயம்படிக்கவேண்டுமா?' என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

3 comments:

arunchunai said...

sathiyama anth booka padikathinga
any how i found ur blog intresting

Muthuprakash Ravindran said...

Interestingly, I never started it..

arunchunai said...

grt

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...