எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்துவார். இது எவ்வளவு கஷ்டம் என்பது ஒரு முறை இது போன்று எழுதி பார்த்தால் புரியும்.
அதே நடையில் ஒரு மனிதரின் நினைவுகளை எழுதுவது என்பது இன்னமும் கடினம். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியின் தாக்கங்களை பற்றி இரு வரிகளில் தன் பார்வையை பதிவு செய்யாமல் நிகழ்வுகளை எழுதுவது எப்படி சாத்தியப்பட்டது என்பது எனக்கு வியப்பே.
அதுவும், எம்.ஆர். ராதா போன்ற ஒரு கலைஞனின் நினைவுகளை நடுவில் கருத்து சொல்லாமல் பதிவு செய்வது இன்னமும் கடினமே. இருந்தாலும் ஓரிரு இடங்களில் அதே உரையாடல்கள் மூலமாக தனது கருத்துகளை சொல்லவும் செய்கிறார். ஆனால் இது மிகவும் சில இடங்களில்.
இது ஒரு புறமிருக்க, இது போன்ற கலைஞன் இன்று இல்லையே என்ற சிறு ஏக்கமும் எழாமல் இல்லை. அனுஷ்காகளும், தமன்னாக்களும் கலைமாமணியாய் உலா வரும் இன்றைய தமிழகத்தை பற்றி எம்.ஆர். ராதா என்ன சொல்லி இருப்பார் என்றும் தோன்றாமல் இல்லை. இன்று அது மாதிரி ஒரு கருத்தை சொல்லும் தைரியமும் எவரிடமும் இல்லை என்பதும் தோன்றுகிறது.
கலை என்பது மக்களுக்காக என்று ஒரு கொள்கையுடன், வேறு எவரை பற்றியும் கவலை இல்லை என்று வாழ்வது என்பது ராதாவின் வாழ்க்கை. அவர் விவரிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், தனது பெயரை எதிர்காலத்திற்கு பதிவு செய்யும் விஷயமாய் மட்டும் இல்லாமல், தனது கடந்த காலத்தை எந்த ஒரு judgmental mentality யும் இல்லாமல் பதிவு செய்கிறார். எல்லோரை பற்றியும் ஒரு கருத்து சொல்கிறார். எவரையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்கிறார். தமிழகத்தில் வீழ்ச்சி என்பது இது போன்ற நிகழ் கால கலைஞன் எவனும் இல்லாமல் பார்த்துகொண்டது என்றே தோன்றுகிறது.
-------------
சமீபத்தில் ஓர் இரவில் இந்த பாடலை கேட்டேன். கேட்டவுடன் பாடலின் இந்த ஒரு வரி தலைக்குள் நுழைந்துவிட்டது. 'குவியம் இல்ல ஒரு காட்சிப் பேழை' . சாதரணமான ஒரு உவமை தமிழில் சொல்லும் பொழுது ஏற்படுத்தும் பிம்பங்கள் தரும் இனிமை சொல்லமுடியாதது.
Subscribe to:
Post Comments (Atom)
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
I consider Vanathy as one of the most complex and intriguing character ever created in the Tamil novel world (OK, I still consider Yamini of...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...
8 comments:
குவியம் இல்லா காட்சி பேழை என்றால்??
குவியம் என்பது Focus. காட்சி பேழை என்பது camera. இப்பொழுது புரிகிறதா?
மிக்க நன்றி sir.....
காட்சி பேழையின் சரியான அர்த்தம் என்னவென்று வெகு நாட்களாய் தேடிகொண்டிருந்தேன்...:)
மிக அருமையான உவமை....:)
காட்சி பேழை என்பது show case என்றும் சொல்லலாம்.
Contextual meaning எடுத்தால் குவியம் உள்ள காட்சி பேழை camera. show case இல் ஏது காட்சி பேழை?
காட்சிப்பேழை என்றால் gallery என்று கேள்விப்பட்டேன்..அப்போது அதன் அர்த்தம் புகைப்பட கோர்வைகள் அல்லது சேமிப்பு என்று நினைக்கிறேன் . என் கேள்வி என்னவென்றால் என்னுடைய புது blog நான் உணர்வுப்பேழை என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்.so galery of feelings உங்கள் கருத்து....இது சரி தானா ??
Eric pavel, உணர்வு பேழை என்பது என்வரை சரியே..
பேழை means box,(பெட்டி...)
காட்சிப்பிழை means illusion or blur image or out of focus..
குவியம் இல்லா காட்சிப்பிழை...என்பதே சரியாக இருக்கும்.
Post a Comment