தூத்துக்குடி

'கொற்கை'யும் 'ஆழி சூழ் உலகு'ம் படித்ததில் இருந்தே இந்த கதைகளில் வரும் சில இடங்களை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். தூத்துக்குடிக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது என்று ஆனவுடனேயே கிடைத்த 3-4 மணி நேரத்தில் செல்ல வேண்டிய 2 இடங்களை முடிவு செய்து பார்த்து விட்டு வந்தோம்.
 
 பனிமய மாதா கோயில் ஒரு 400 வருட பழமையானது. போர்த்துகீசியர்களால் இங்கிருக்கும் பரதவர்களுக்காக கொண்டு வரப்பட்ட மாதா இந்த பகுதியில் அதுவரை தனியாக அருள் பாலித்து கொண்டிருந்த சந்தன மாரியம்மனுக்கு மாற்றாக ஒரு தாய் கடவுளாய் காட்ட பட்டார்.
 
 கோவாவில் இருக்கும் பசிலிக்கா(Basilica)களை நினைவில் கொண்டு பார்த்தால் சிறியதாக இருக்கும் இந்த கோயில் முற்றிலும் வேறுபட்ட முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒரு படகை நினைவுறுத்தும் இந்த கோயிலின் உள் பகுதியும் படகை போன்றே உள்ளது. பரதவர்களின் ஆதார தொழிலான கடலோடும் தொழிலின் காரணமாக இருக்கலாம்.

பல அற்புதங்கள் நிகழ்த்தியதாய் சொல்லப்படும் பனிமய மாத கோயில் இப்போது அடுத்து வரும் ஆகஸ்ட் மாத திருவிழாவிற்காக வேலை நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்து சென்றது ஊரின் வட பகுதியில் இருக்கும் சந்தன மாரியம்மன் கோவிலுக்கு. ஊருக்கு நடுவே இருந்தாலும் கொஞ்சமும் கூட்டமின்றி பழமையின் எந்த அடையாளமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது கோயில். ஒரு காலத்தில் ஊரின் முக்கிய கோயிலாக இருந்ததிற்க்கான எந்த
அடையாளமும் இன்றி இருக்கிறது.
  

 
தூத்துக்குடியின் புதிய கடற்கரையில் சற்று நேரம் இருந்துவிட்டு ஊர் திரும்பினோம்.

2 comments:

ramanan.pg said...

There was an article in Hindu with the Photograph of "KoRkai", which I am not able to trace in my files.I t exists somewhere. In the mean time read this:http://www.sramakrishnan.com/?p=3386

ramanan.pg said...

There was an article in Hindu with the Photograph of "KoRkai", which I am not able to trace in my files.I t exists somewhere. In the mean time read this:http://www.sramakrishnan.com/?p=3386

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...