Paico Classics 10 - Kidnapped (Tamil) - கிட்னாப்டு

'கிட்னாப்டு'. ஆர்.எல். ஸ்டீவென்சனின் இன்னுமொரு சாகச கதை. எட்டாம் வகுப்பில் ஆங்கில துணைப் பாடமாய் 'Treasure Island' படித்ததுதான் முதல் அறிமுகம். அந்த புத்தகத்தில் இருந்த அந்த தீவின் வரைபடத்தை பார்த்து எத்தனையோ நாட்கள் நானும் ஒரு புதையல் எடுக்க (என் கற்பனையில்) கிளம்பி இருக்கிறேன். அந்த சாகச கதைகளின் வரிசையில் இன்னுமொன்று. தன் சித்தப்பாவால் ஏமாற்றப்பட்டு ஒரு கப்பலில் கடத்தப்படும் சிறுவன் எப்படி திரும்பி வந்து பழி வாங்குகிறான் என்ற கதை. இப்போதும் 5 பாடல்கள் சண்டையுடன் நல்ல மசாலா படமாக இருக்கும்.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 9 - Return of the Native (Tamil) - ரிடர்ன் ஆப் தி நேடிவ்

தாமஸ் ஹார்டி. பள்ளி நாட்களில் படித்த 'Mayor of Casterbridge' மூலம் அறிமுகம் ஆனவர். அப்போதே அந்த கதை கொஞ்சமும் புரியவில்லை. ஹார்டியின் கதைகள் வெறும் காதல் கதைகளாய் மட்டும் இல்லாமல் மனிதர்களின் தடுமாற்றங்களையும் அதன் மூலமாக ஏற்படும் அவலங்களையும் காட்டுவதால் அந்த கதைகளின் நுணுக்கம் புரிய வேண்டி இருந்தது. கல்லூரியில் 'Woodlanders' படித்த போது அதன் immorality அதிர வைத்தது. தமிழ் உலகின் நன்மை x தீமை பேதங்கள் மறைந்து எல்லா விஷயங்களையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்த நாட்கள். ஹார்டியும் டி.ஹச்.லாரன்சும் இந்த கேள்விகளை இன்னமும் அதிகமாக்கினார்கள்.

ரிடர்ன் ஆப் தி நேடிவ். இன்னுமொரு முக்கோண காதல் கதை. ஆனால் இங்கே காதல் என்பது வெறும் ஈர்ப்புகளால் மட்டும் அல்லாமல் சமுக நிலை, பணம் என பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு வருகிறது. கல்யாணம் ஆன/ஆகாத என்ற பேதமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. பல குறியீடுகளையும், கேள்விகளையும் கொண்ட கதை. முதலில் 'பைகோ'வில் படித்தாலும் இதை முழுமையாக புரிந்து கொள்ள வருடங்களாயிற்று. இப்போதும் ஒரு சலனம் ஏற்படாமல் இதை படிக்க முடியவில்லை.

இதை cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 8 - Sea Wolf (Tamil) - கடல் ஓநாய்

கடல் ஓநாய். ஜாக் லண்டன் எழுதிய புதினம். கப்பல் விபத்தில் தப்பிக்கும் ஒருவன் சீல் வேட்டையாடும் கப்பலான 'கோஸ்ட்'டின் காப்டன் வொல்ப் லார்செனுடன் போடும் உளவியல் போராட்டம்தான் 'கடல் ஓநாய்'. சிறு வயதில் நல்லவன், கெட்டவன் என்று எளிதாக பிரித்து கடந்து செல்லும் கதை. பின் வாசிப்பில் நல்லவனா கெட்டவனா என்று கேள்வியை எழுப்பி யோசிக்க வைத்தது. ஜாக் லண்டனின் கதைகளுக்கே உரித்தான 'gray tinted' வில்லன் வொல்ப். இடையே ஒரு காதல் கதை.மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டது.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 7 - Food of the Gods (Tamil) - கடவுளரின் உணவு

கடவுளரின் உணவு. ஹச்.ஜி.வெல்ஸ் எழுதிய விஞ்ஞான புதினங்களில் ஒன்று. அவரின் 'கால யந்திரம்' வந்த பிறகு பைகோ கிளாச்சிக்கில் வந்த இரண்டாவது வெல்சின் நாவெல். இன்றைய GM உணவு குழப்படிகளை அன்றே யோசித்து இவ்வாறு உருவாக்கப்படும் உணவு சற்று பிழையானால் என்னவாகும் என்று எழுதப் பட்டக் கதை. இப்போதும் scan எடுக்கும் போது ஒரு முறை முழுவதும் படித்து விட்டேன்.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 6 - Huckleberry Finn (Tamil) - ஹக்கிள் பெர்ரி பின்

ஹக்கிள் பெர்ரி பின். நான் முதலில் படித்து 'டாம் சாயர்' தான். சிறுவர்களுக்கான கதை என்றாலும் அதன் சாகசங்கள் வெகுவாக ஈர்த்தது. நக்கலான பேச்சு, இழையோடும் நகைச்சுவை, சிறுவர் உலகத்திற்கும் பெரியவர் உலகத்திற்கும் இடையே நேரும் சிறு சிறு மோதல்கள் என மனதிற்கு மிக அருகில் இன்றும் உள்ள கதை அது. ஆனால் ஹக்கின் கதை வெறும் சிறுவர் கதை என்பதை தாண்டி, அன்றைய மிஸிசிப்பி மாநிலத்தின் சமூக நிலையின் ஒரு மெல்லிய விமர்சனமாகவும் இருக்கிறது. கருப்பு அடிமைகளின் நிலை, குடியால் சீரழியும் மக்கள் என பல பிரச்சனைகளையும் தொட்டு செல்கிறது. டாம் படித்த பொழுதே மார்க் ட்வைனின் ரசிகனாகிவிட்டேன். பொழுது போகாத தருணங்களில் சார்லஸ் டிக்கென்சின் புதினங்களுக்கும் மார்க் ட்வைனின் எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை யோசிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 5 - Time Machine (Tamil) - கால யந்திரம்

 ஹெச்.ஜி.வெல்ஸ். விஞ்ஞான புதினத்தின் தந்தை. நான் படித்த முதல் வெல்ஸ் நாவல் இது. சுஜாதாவின் விஞ்ஞான கதைகள் மட்டுமே தெரிந்திருந்த நாட்களில் ('என் இனிய இயந்திரா' ஆ.வியில் தொடராக வந்து முடிந்திருந்த நேரம்)  ஹெச்.ஜி.வெல்ஸ் ஒரு புதிய உலகை காட்டினார். உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்திய ஒரு காரணமே இந்த புத்தகங்களை இத்துனை நாட்கள் வைத்திருக்க செய்தது.

cbr ஆக படிக்க இங்கே சொடுக்கவும்.

Paico Classics 4 - Ivan Hoe (Tamil) - ஐவன் ஹோ

ஐவன் ஹோ. சர் வால்ட்டர் ஸ்காட்டின் இந்த நாவல் முதலில் பைகோ கிளாச்சிக்கில்தான் படித்தேன். கிளாச்சிகில் படிக்கும் போது அவ்வளவு ஈர்ப்பு ஏற்படுத்தாத கதை முழுவதாக 'unabridged'ஆக படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். ஸ்காட்டின் 'கெனில்வொர்த்' நான் ஏற்கனவே படித்து இருந்தேன். ஆனால் ஐவன் ஹோவின் ரொவெனாவும் ரெபேக்காவும் ஈர்த்த அளவிற்கு யாரும் ஈர்க்கவில்லை. 'Romance' எழுதுபவர்கள் ஸ்காட்டை தாண்டி எழுத முடியாது என்பது எனது கருத்து. இன்றும் 'Kenilworth'தும் 'Ivan Hoe'வும் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைப்பது முடியாது.

cbr போர்மட்டில் படிக்க இங்கே செல்லவும்.

Ivan Hoe 

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...