ஏன்?

படித்த புத்தகங்களை பற்றி எழுதலாம். நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எழுதலாம். அல்லது உலக நடப்புகளை பற்றி என் கருத்துக்களை பதிவு செய்யலாம். இவை எல்லா வற்றையும் விட எதுவும் செய்யாமல் சும்மா இருக்கலாம்.
எதற்க்கை எழுத வேண்டும்? எனக்கு இன்று வரை புரியவில்லை. இந்த compulsion. எதற்காக? நான் 12 வயதில் diary எழுத ஆரம்பித்தேன். ஏன் என்று தெரியவில்லை. இன்று வரை கிடைத்த நேரத்தில் எல்லாம் எழுதுகிறேன். என் பழைய நாட் குறிப்புகளை பார்க்கும் போது ஒன்று தெரிகிறது. பின்னாளில் யாரோ படிக்க போகிறார்கள் என்ற உணர்வோடு எழுதி இருக்கிறேன்.
ஒரு கட்டத்தில், என் நாட் குறிப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். எத்தனை பாகங்கள், எப்படி வடிவமைப்பு என்று எல்லாம் தீவிரமாக யோசித்து வைத்திருந்தேன்.
இப்போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.
ஆனால் நான் எழுதுவது ஒரு சீரான வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. என் நாட் குறிப்புகளை நிறுத்தி ஒருஇரண்டு, மூன்று வருடங்களாய் விட்டது. இந்த blog, நான் உறுப்பினராய் இருக்கும் சில குழுக்களில் கருத்து பரிமாற்றங்கள்என்று நான் எழுதுவது மட்டும் நிற்கவில்லை. முன்பு இருந்ததை விட குறைந்துவிட்டது. அவ்வளவே.
கவிதை எழுதுவது கிட்டதட்ட நின்றுவிட்டது. நல்ல கவிதை எது என்று நான் உணர்ந்த தருணங்களில் அது நின்று இருக்க வேண்டும்.
ஆனால், தன்னை பற்றி ஒரு அபிப்பிராயம் இருக்கும் எவரும் எழுதுவர் என்பது என் எண்ணம். அதுவும், என்னை போன்ற ego-centric மனிதர்களுக்கு அது சுவாசம் போல.

1 comment:

Story Teller said...

Please continue to write.. just happened to see your blog and i'm reading all your post 1 by 1 :) one small suggestion.. eyes are paining to read white fonts under black background... oru nalla idhama theme ah parthu podunga.. nandri.. .

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...