அழகர் சாமியின் குதிரையும், மரம் வெட்டிகளும்

சென்ற வாரம் 'அழகர்சாமியின் குதிரை' பார்த்தேன். பாஸ்கர் சக்தியின் கதை படித்த நினைவில்லை எனினும், படம் ஒரு நல்ல குறு நாவல் படித்த திருப்தியை தந்தது. குதிரை என்பதே ஒரு குறியீடாய், ஒவ்வொருவருக்கும் ஒன்றாய் வருகிறது.
அழகர்சாமிக்கு அவன் பிழைப்பாய், ஊருக்கு அழகர் சாமியாகவும், ஊர் பிரசிடெண்டுக்கு அவர் பதவியை காக்க வந்த வரவாய் என்று எல்லோருக்கும் எல்லாமாய் உருவகம் எடுக்கிறது.
இடையில், திருப்பூருக்கு வேலைக்கு பிள்ளைகளை அனுப்புவது, ஊர் மைனரின் அட்டகாசங்கள், உளவு பார்க்க வரும் போலீஸ் குறி சொல்லி ஆவது, ஊர் கோடங்கி செய்வினை செய்வது என்று சிறு சிறு நிகழ்வுகள். இதுதான் கதை, பாடல், சண்டை என்று எதுபற்றியும் கவலையுறாமல் பயணிக்கிறது.
குதிரையே ஊரின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாகவும், காரணமில்லாமலும் இருக்கிறது. The absurdness of the setting is the reason for the absurdness itself. குதிரை இந்த absurdness இன் மையமாய் இருந்து அதை சுற்றி இருப்போரின் வாழ்வை நகர்த்துகிறது. இறுதியில் மரக்குதிரை மாறவும் மாறி எல்லோருக்கும் அருள் பாலிக்கவும் செய்கிறது. நல்ல படம்.
------------
சிபியின் புத்தகம். இது பதினாலாவது அத்தியாயம். அத்தியாயம் ஒன்றில் பாபரிடம் ஆரம்பிக்கும் புத்தகம், பதிமூன்று அத்தியாயங்களில், முகலாய அரசர்கள், சிவாஜி, முதலானோரை விவரித்து விட்டு, ஒரு திருப்பம் போல் இந்த அத்தியாயம் வருகிறது. எனக்கு இந்த புத்தகத்தில் பிடித்த அத்தியாயம் இதுவே. சிபி வெறுமனே படிக்காமல், படித்ததை யோசித்து சில கருது கோள்களை உருவாக்கி கொள்கிறான் என்பதை போன்று சந்தோசம் தரக்கூடியது எது?

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...