கொலைவெறியும் மயக்கமும்

எனக்கு ஏன் 'கொலைவெறி' பாடல் பிடிக்கவில்லை என்று கேட்பவர்களுக்காக.

இன்று தன் மனைவியுடன் நடக்கும் சிறிதும் பெரிதுமான சண்டைகளில் தானே வெற்றி பெறுவதை பெருமிதத்துடன் சொன்ன ஒருவரை சந்தித்தேன். 'அதில் என்ன இருக்கிறது?' என்றதிற்கு 'கெத்தாக இருக்கிறது' என்றார். கல்யாணம் பண்ணிய ஒரே காரணத்தினால் தன் மனைவி தன்னை வென்றுவிட கூடாது என்னும் மனநிலை எங்கிருந்து வருகிறது?.

இன்றைய இருபத்தி ஓராம் நூற்றாண்டு தமிழகத்தில் மாறாத சில விசயங்களில் முக்கியமானது, இன்றைய தமிழ் இளைஞனின் மனநிலை. நமது பெண்கள் எல்லாம் தங்கள் கட்டு பெட்டியில் இருந்து வெளி வரும் நிலையில் அதை எதிர் கொள்ளும் இளைஞர்களை நமது சமூகம் உருவாக்கவில்லை. இன்றும் தமிழ் இளைஞன் 'சகலகலா வல்லவன்' கமலாகவே இருக்கிறான். அதன் மாற்றான ஒரு பிம்பத்தை இன்றும் நமது திரை உலக ஜாம்பவான்களால் கட்டமைக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை. அதனால்தான் இது போன்ற பாடல்கள் அந்த கட்டை வண்டியில் படித்த அம்பிகாவை கேலி செய்யும் படிக்காத கமலின் பாட்டின் நீட்சியாகவே தெரிகிறது. புதிதாய் எதுவும் இல்லை.அந்த கட்ட வண்டி பாடல் எந்த ஒரு பெண் பிம்பத்தை கட்டமைத்ததோ அதையே இதுவும் செய்கிறது.

இன்றைய இந்த படங்களில் எல்லாம் ஒரு பொது நாயகன், தனுஷ். இவர் படங்களில் எல்லாம் இவர் ஒரு ஏழையாக, படிப்பறிவில்லதவராக, ரவுடிஆக, வேலை வெட்டி இல்லாதவராக இருப்பார். இவரை காதலிக்கும், காதலித்து ஏமாற்றும், அல்லது இவரது நண்பரின் காதலியாக ஒரு சிவப்பான, படித்த பெண் (தமிழ் பெண்கள் எல்லாம் இவர் படங்களின் வேட்டைக்காரன்பட்டியில் கூட சேட்டு பெண்கள் போல் இருப்பார்கள்). இவர் கட்டாயம் ஒரு இடத்தில் அந்த பெண்ணை அவமான படுத்துவார். அப்புறம் குடித்துவிட்டு அவளை வெட்டு, குத்து, என்று பாடுவார். இந்த பம்மாத்து வேலைக்கு அவர் அந்த பாத்திரத்தில் சிக்கி அதுவாக மாறுவதை காரணமாக பேட்டிகளில் சொல்லிவிடுவார்.

இன்றைய தமிழகத்தின் விக்டோரியன் கலாச்சார மனோபாவங்களுக்கு இது போன்ற கலை பின்புலம் ஒரு முக்கிய காரணம். இதை பார்த்து வளரும் ஆண் தன் வாழ்வில் பெண் என்பவள் கேள்வி கேட்பவளாய், படித்தவளாய், தன்னினும் சாமர்தியமுடையவளாய், தனக்கென்று உணர்வுடையவளாய்
காணும் பொழுது, அவனின் மன இறுக்கம் அதிகரிக்கிறது. ரோடில் ஒரு பெண் ஸ்கூட்டியில் தன்னை முந்துவதை கூட தாங்க முடியாதவனாய் இருக்கிறான். இதுதான் இன்றைய தமிழ் ஆணின் யதார்த்தம். இதை ஒத்து கொள்ள முடியாமல் போகும் நிலையில் தான் நமது பத்திரிக்கைகளின் கள்ளகாதல் போன்ற பிரயோகங்கள். காதல் என்பதையே என்னவென்று புரிந்து கொள்ளாத சமூகத்தில் கள்ளகாதல் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தான் என்ன? இந்த மனோ நிலைக்கு தீனியாகதான் இது போன்ற பாடல்கள்.


பெண் என்பவளை ஆணை ஏமாற்றுபவளாய் சித்தரிப்பது என்பது ஆதாம்
/ஏவாள் கதையில் ஆரம்பிக்கிறது. இந்த பாடல்களில் எதுவும் புதிதில்லை. எதன் பொருட்டு ஏவாள் கதை பெண்ணை நம்பாதே என்று புத்தி போதிக்கின்றதோ அதே நீதியைத்தான் இந்த/இது போன்ற பாடல்களும் போதிக்கின்றன. 


கடைசியாக,

"To emancipate woman is to refuse to confine her to the relations she bears to man, not to deny them to her; let her have her independent existence and she will continue none the less to exist for him also: mutually recognizing each other as subject, each will yet remain for the other an other. The reciprocity of their relations will not do away with the miracles — desire, possession, love, dream, adventure — worked by the division of human beings into two separate categories; and the words that move us — giving, conquering, uniting — will not lose their meaning. On the contrary, when we abolish the slavery of half of humanity, together with the whole system of hypocrisy that it implies, then the 'division' of humanity will reveal its genuine significance and the human couple will find its true form."

-Simone de Beauvoir "The Second  Sex"

No comments:

The Girl with a smile and a Turkey shooter

The Q train runs from the 96th Avenue till the Coney Island . I was waiting for it in the 34th Street - Herald Square station. Four lines ...