வானதி

வானதி : அப்பா, நான் என் பெயரை மாத்த போறேன்?
நான் : ஏன்டா?
வானதி: எனக்கு Ninja hattori தான் பிடிக்கும்.அதன் என் பெயரை 'Ninja Hattori' னு மாத்த போறேன்.
நான் : அப்பா வச்ச பேரு பிடிக்கலையா உனக்கு?
வானதி : ம்ம்ம்.. ஆமா அப்ப என் பேரு இனிமே வானதி அபினவ் நிஞ்சா ஹட்டோரின்னு வச்சுக்கலாமா?
நான்: அப்போ Barbie கோபிச்சு கிடுவளே?
வானதி : ஆமா அப்போ என் பேரு ' கி கூ வானதி அபினவ் ஹட்டோரி பார்பி'ன்னு வச்சுகவா?
நான்:ஆமா, இப்போதான் நல்லா இருக்கு.

*வானதி எப்போதும் அவளை 'கா கி கூ' 'கி கா கூ' என்று refer பண்ணி கொள்வாள்.
----------
சிபி எப்போதும் ஒரு set of rules கொடுத்துவிட்டால் அதற்குள் இருந்து கொள்வான். அதை மீற வேண்டும் என்றோ, follow பண்ண தேவையில்லை என்றோ அவனுக்கு தெரியாது. எனவே அவனை வளர்ப்பது கொஞ்சம் எளிதாய் இருந்தது.

வானதி நேர் எதிர். எப்படி அந்த rules வளைக்கலாம், சுற்று வழி உண்டா என்று அவள் யோசித்து, அதை மீறுவதற்கு நியாயங்கள் கற்பிப்பாள்.வானதியும் சிபியும் 'global art' வகுப்புகள் போவார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு விஷயம் நடக்கும். கொண்டு போகும் snacks வகுப்பு நேரத்தில் சாப்பிட கூடாது என்று ஆசிரியை சொன்னால், வானதி மேஜைக்கு கீழே குனிந்து கொண்டு சாப்பிடுகிறாள் என்று சிபி சொல்லும் போது இவள் ஒரு சிரிப்புடன் அதை தாண்டி போய் விடுகிறாள்.

பள்ளியில் பார்க்காமல் one, two, three எழுத சொன்னால் அதை பக்கத்துக்கு பெண்ணிடம் verify பண்ணி எழுதுவிட்டு அதை அவள் அம்மாவிடம் சொல்லுகிறாள்.

-----
தினமும் இரவு தூங்கும் போது நான், சிபி, வானதி மூன்று பேரும் ஒவ்வொரு கதை சொல்லுவோம்.

அது போல் நேற்று சொல்லும் போது, சிபி 'Ariel - the mermaid ' கதை சொன்னான். 

அடுத்து வானதி சொல்ல ஆரம்பித்தாள்
"ஒரு ஊருல ஒரு rich man இருந்தான்.
அந்த ஊருல நிறைய பேர் இருந்தாங்க. ஆனா அவங்க எல்லாம் poor.
அவங்க எல்லாம் ரொம்ப வேலை பார்த்தாங்க.
ஆனாலும் அவங்க poorஆ இருந்தாங்க.
அந்த rich man மட்டும் rich ஆகிட்டே இருந்தான்.

அப்போ கிருஷ்ணா இத பார்த்தான், அவனுக்கு இது பிடிக்கலை.
so நேரா அந்த rich man  கிட்ட போனான். அவன்கிட்ட இருந்த rupees , gold எல்லாத்தையும் எடுத்து எல்லா poor people கிட்டயும் கொடுத்தான்.
இப்போ அந்த ஊர்ல எல்லோரும் rich ஆகிட்டாங்க. அப்புறம் happyஆ இருந்தாங்க" 

இதுதான் அவள் சொன்ன கதை. கிருஷ்ணா ஒரு deus ex machina மாதிரி. கதை தடை பட்டால் உடனே வந்து சரி செய்து விடுவார்.
அது இருக்கட்டும், இந்த கதையின் அரசியல் எனக்கு மட்டும் தோன்றுகிறதா இல்லை உங்களுக்குமா?

But now I know which side of the political spectrum she is going to be.

No comments:

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...