சென்னை புத்தக காட்சி

  இந்த முறை புத்தக காட்சி நந்தனத்தில் நடப்பது யாருக்கு பிடித்ததோ இல்லையோ எனக்கு பிடித்தது. இங்கிருந்து ஒரு பஸ்சில் போனால் 10 நிமிடங்கள் ஆகிறது. திரும்பும் போது இன்னமும் சீக்கிரம் வர முடிகிறது.
 
அதை தவிர இந்த முறை வேறு பெரிய வித்தியாசம் இல்லை. புத்தக விலைகள் எல்லாம் ஏறி விட்டது. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற சில நிறுவனங்கள் தவிர வேறு எல்லாவற்றில்லும் விலை 100 ரூபாய்க்கு மேல்தான். எப்போதும் வாங்கும் புத்தக அளவை விட இந்த முறை குறைவாகவே வாங்கினேன்.

 போன வாரம் போன பொது விட்டு போன புத்தகங்களை பார்பதற்கு இன்னொரு முறை சனி கிழமை போனேன். அன்று 100 ரூ க்கு குறைவான புத்தகங்கள் மட்டுமே வாங்க முடிவு பண்ணி இருந்தேன். வழக்கம் போல சாகித்ய அகடெமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் கை கொடுத்தது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க சில்றன் புக் டிரஸ்ட் அரங்கு. நல்ல புத்தகங்கள் 10-30 ரூவில் கிடைக்கிறது.

ஆனால் நேற்றைய ஆச்சர்யம் 'Oxford university press'இல் இருந்தது. 'Oxford bookworms' மற்றும் 'Oxford Dominoes' இல் ஆங்கில இலக்கியத்தின் முக்கிய புத்தகங்கள் குழந்தைகள் படிக்கும் வகையில் கிடைக்கிறது. விலை 60 - 100 ரூ மட்டும். ஒரு 8-9 புத்தகங்கள் வாங்கினேன்.

இந்த முறை வாங்கிய முக்கிய புத்தகம் 'தாத்ரி குட்டியோட ஸ்மார்த்த விசாரம்'. ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் எழுதியது.

No comments:

ராமானுஜர் - நாடகம்

இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்'  வருடங்களுக்கு முன் வைணவத்தின் மீது இப்போதிருக்கும் பிரேமை வருவதற்கு முன் வாசித்தது. எனவே இப்ப...