இதுவே என்னிடம் உள்ள பைகோ கிளாச்சிக் வரிசையின் கடைசி புத்தகம். எனது பிரியமான புத்தகமும் கூட. 'இரும்பு முகமூடி மனிதன்' அல்லது 'The Man in the iron mask" அலெக்சாண்டர் டுமாஸ் என்னும் எழுத்தாளனின் உலகத்தை அறிமுகம் செய்தது. அது மட்டும் அன்றி, 17-18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு அரச உலகத்தின் மீது ஒரு பெரிய காதலை ஏற்படுத்தியது. இதன் மூலமே இந்த காலகட்டத்தின் மாபெரும் பிரெஞ்சு எழுத்தாளர்களான வோல்டைர், ரூசோ, மோலியே மற்றும் பிரெஞ்சு புரட்சியின் பின்புலம், அதன் சோகங்கள், வெற்றிகள் என்று ஒரு பெரிய உலகமே விரிந்தது. இன்றும் பிரெஞ்சு நாட்டின் மீதான அந்த ஈர்ப்பு குறையாமல் இருப்பதற்க்கான ஆரம்ப புள்ளி இங்கிருந்துதான் தொடங்குகிறது.
'இரும்பு முகமூடி மனிதன்' டுமாசின் புகழ்பெற்ற 'மூன்று மஸ்கேட்டியர்கள்' நாவலின் மூன்றாம் அல்லது நான்காம் பாகமாகும். இரண்டாம் பாகம் ஒன்றாகவோ அல்லது இரண்டாகவோ பிரித்து பதிப்பிக்க பெறுகிறது. டர்டகனநின் சாகசங்கள் இதில் நிறைவுறுகிறது.

No comments:
Post a Comment