துயரத்தின் நிழல்

துயரத்தின் நிழல்
இருளின் நடுவே
என்னைத் தேடும்.

என்றோ நிகழப் போகும்
சந்தோஷத்தின் சப்தம்
சன்னமாய் ஒலிக்கும்.

அதிரும் மௌனத்தின் மெல்லிய
நீட்டலாய் சிறு மலரொன்று மலரும்.

தூரத்தின் வெளிச்சத்தில்
இரவின் காணா
பாதைகளில் சிதறி இருக்கும்
துயரத்தின் சுவடுகளை
நாம் தேடுவோம்.

மலரும் பூக்களின் பனித்துளிகளின்
மேலே மரணம் மெல்லமாய் படரும்.

நாட்களின் நீட்சியில்
சிறு பூவாய் மரித்த உன்னை
கையில் ஏந்த மறுப்பேன்.

பாதையின் சுவற்றின்
மறு புறம் உன் உறக்கம்
எப்போதும் என் நினைவைக் கூட்டும்.

வார்த்தைகளின் குரூரம்
கொல்லும் மனங்களை நினைந்து
மனம் தூக்கம் மறக்கும்.

கண்ணின் நீர் மறைக்க
உன் நலம் கேட்கும் என் மனம்.


நள்ளிரவின் விழிப்பில்
மறுதூக்கம் தேடி
உன்னை எண்ணி இருப்பேன்.

துயரத்தின் நிழல்
என்னைத் தேடி வரும்.
நாம் அப்போது
தூர தூரத்தின் சந்தோஷக்
கடலின் கரையில்
நம் பெயரை எழுதி இருப்போம்.

கடல் சங்குகள் நமக்காய் காத்து கிடக்கின்றன.

1 comment:

King Viswa said...
This comment has been removed by the author.

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...