"Until I found you,
I wrote verse, drew pictures,
And, went out with friends
For walks…
Now that I love you,
Curled like an old mongrel
My life lies, content,
In you…."
கமலா தாஸ் பல வருடங்களுக்கு முன் எனக்கு இந்த சிறு ஆங்கில கவிதையின் மூலம் அறிமுகமானார்.
இதை எதில் படித்தேன் என்றோ , எப்போது என்றோ சிறிதும் ஞாபகமில்லை. ஆனால் இந்த வரிகளின் ஒரு personal approach இதை மறக்க முடியாத ஒரு கவிதையாக்கி விட்டது. தீவிரமாக காதலித்த ஒருவரால் மட்டுமே இந்த கவிதை எழுத பட்டிருக்க முடியும்.
பின் கமலா தாசின் மரணம் வரை அவர் வாழ்வை ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தாலும், அவரது கவிதைகளை தவிர எதையும் வாசித்ததில்லை.
'என் கதை' எழுப்பும் பிரதானமான கேள்விகள் இரண்டு. தனிமனித ஒழுக்கம் என்பது என்ன? இந்திய வாழ்வு முறையில் பெண்ணின் வாழ்வு எவ்வாறாக கட்டமைக்க படுகிறது மற்றும் பெண்ணின் உடல் அரசியல் இன்று எவ்வாறு இயங்குகிறது?
40 வயது வரையிலான கமலாதாஸின் வாழ்க்கை ஒரு non-linear முறையில் சொல்லப்படுகிறது. கல்லீரல் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது எழுதியதாக பதிவு செய்கிறார்.
'ஒரு குருவியின் அவலம்' என ஆரம்பிக்கும் கதை கமலா தாஸின் காதலின் கதைகளாய் விரிகிறது. ஒரு விதத்தில் சொல்லப்படாத இந்திய பெண்களின் கதையாய் போகிறது. சிறு வயதிலேயே பொருந்தாத திருமணம் ஒன்றில் செல்லும் கமலா , அந்த திருமணத்தின் உள்ளேயே தனது காதலர்களை கண்டு கொள்கிறார். திருமணத்தின் வெளியே வரவும் துணிவில்லாமல், காதலனுடனும் செல்ல முடியாமல் இயங்கும் ஒரு வாழ்க்கை வாழ்கிறார். கவிதைகள் மூலம் தன விடுதலையை ஓரளவிற்கு எட்டுகிறார்.
இந்த புத்தகம் எழுப்பும் தனி மனித ஒழுக்கத்தை கட்டமைப்பது தனி மனிதர்களா, இல்லை சமூகமா? இந்திய முறையில் சமூகத்தின் திணிப்பு அளவில்லாதது. ஒழுக்கம் என்பதே அந்த காலகட்டத்தின் வெளிப்பாடு மட்டுமே - ஒரு நிரந்தரமான கோட்பாடு அல்ல என்ற புரிதலே இல்லாத சமூகம் இது. இதில் ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது வெறும் உடல் சார்ந்ததாய் நிர்ணயிக்க பட்டு அந்த உடலின் மீதான வன்முறை வரையறுக்க பட்டுள்ளது. அப்பா, கணவன், மகன் என வாழ்நாள் முழுவதும் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது.
கமலா தாஸ் இந்த வன்முறையில் இருந்து வெளி வரவும் முடியாது , உள்ளிருந்து தனக்கான ஒரு உலகை உருவாக்குகிறார். தன கணவனுடனான முதல் இரவு (இந்த வார்த்தையின் வன்முறையை உணராமல் போவதே இந்திய கலாசார மரபு!) தன உடல் மீதும் , மனதின் மீதும் நிகழ்த்திய தோற்று போன வன்முறையின் முடிவாகவே அவரது வாழ்க்கையின் பயணம் அமைகிறது.
கார்லோ மீதான காதல் ஒரு கனவின் ஓடையாய் நிகழ்கிறது. கணவரை பிரிந்து வர முடியாது என கமலா முடிவெடுக்கும் போது , கார்லோ மறைந்து விடுகிறார். கமலா ஒரு இடத்திலும் இது எவற்றையும் இந்த சமூகத்தின், கலாச்சாரத்தின் மீதான விமர்சனமாக இல்லாது - ஒரு தனி பெண்ணின் தாங்க இயலாத சோகமாக மட்டுமே எழுதுகிறார். இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி.
ஒரு பெண்ணின் - இந்திய பெண் - அக வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமானது , உண்மை அன்பை தேடும் அதன் வேட்கை பற்றி புரிந்து கொள்ளாத வாழ்வின் நடுவே - வருடங்களை கடக்கும் பெண்கள் பற்றிய பொதுக் கதையாகவும் இருக்கிறது.
1970களில் எழுதப்பட்ட இந்த கதை - இன்று பதிப்பிக்கப்பட்டாலும் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதில் இருந்து ஒரு சமூகமாய் நாம் இன்னமும் தேங்கி கிடக்கும் சாக்கடையாய் மட்டுமே இருக்கிறோம் என்றே தெரிகிறது.
கமலா எழுதுவது போல் வாழ்க்கை பெரும் துயரங்களிடையே சிறு சந்தோசங்களை தேடுவதாய் மட்டுமே இருக்கிறது.
View all my reviews
2 comments:
Beautiful review Muthuprakash.
It's 5 days since I read this post, not just reading, re-reading several times and I am still pondering over the lines at the beginning and the end. Very true, deep, but dark and dense.
I read this book in the beginning of 2012. Liked it. At certain places I felt she was too ahead of her times, and at certain places she was otherwise.
Thanks you for the kind words..
I found the book to be at moments sad,and mostly way ahead for a book published in 1972.
Post a Comment