ராமானுஜர் - நாடகம்

இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்'  வருடங்களுக்கு முன் வைணவத்தின் மீது இப்போதிருக்கும் பிரேமை வருவதற்கு முன் வாசித்தது. எனவே இப்போது நாடகமாய் திரும்ப பார்க்கும் வாய்ப்பு வந்த போது போகாமல் இருக்க முடியவில்லை.

ஷ்ரத்தா குழுவினரின் 'ராமானுஜர்' இ.பாவின்ராமானுஜர் ஆக இருந்தாலும் சில இடங்களில் கதையில் சில மீறல்கள் இருக்கத்தான் இருந்தன. அது பின்னர்.

ராமானுஜர் அவரது காலத்திற்கு வெகு முன்னராய் சிந்தித்த ஒரு துறவி. வைணவம் அதற்க்கு அவருக்கு ஒரு வலி ஏற்படுத்தி இருந்தது. எனவே வைணவ பின்புலம் இல்லாமல் அவரை அவரது காலத்தில் வைத்து புரிந்து கொள்வது கடினம்.

'அன்பே தகளியாய்' ஏற்படுத்தப்பட்டது வைணவம். பெருமாளை ஏற்றுக்கொண்டால் வைணவர் என்று ஒரு வெகு லகுவான ஒரு criteria மட்டுமே வைணவத்தின் ஆதாரம். அது ஒரு நிறுவனமாக மாறி இன்று திரிந்து நிற்பது என்பது வேறு விஷயம். அந்த மனிதாபிமானத்தின் வழித்தோன்றலாய் வந்ததால் மட்டுமே ராமானுஜர் தனது மத புரட்சியை செய்ய முடிந்தது.

ராமானுஜராய் நடித்திருக்கும் சிரித்த முகம் கொண்ட சுவாமிநாதனே நாடகத்தின் அச்சு. சிறு வார்த்தை பிழையும் இல்லாது தெளிவான உச்சரிப்புடன் 2.30 மணி நேரமும் நம்மை அசையாமல் பார்க்க வைப்பது அவர் மட்டுமே. பல்வேறு கலாச்சாரங்களின் வழி என ஒரு மிக பெருமளவிலான பேர் நடித்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் ஜனனியின் பாசுரங்கள் மூலமாகவே நகர்கின்றன.

12ம் நூற்றாண்டின் வரலாறு, வைணவம் அந்த காலகட்டத்தில் சந்தித்த நெருக்கடி, சைவர்களின் ஆதிக்கம், அத்வைத - விஷிஷ்டாத்வைத வாதங்கள் போன்றவை சற்று மேம்போக்காய் காட்ட படுவதால், இந்த பின்புலம் இல்லாதவர்கள் நாடகத்தை தொடர்வது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஒரு க்தையாடி மூலமாகவோ அல்லது வெறும் narration மூலமாகவோ இந்த குறையை தவிர்த்திருக்கலாம்.

120 வருடங்கள் வாழ்ந்த ராமானுஜரின் வரலாற்றை நாடகமாக்குவதில் பெரும் சவால்கள் உள்ளன. அவர் ஓரிடத்தில் இருந்தவர் அல்ல. மேல்கோட்டை, தில்லி போன்ற இடங்களுக்கு சென்றவர். ஒவ்வொரு இடத்திலும் எதோ ஒரு மாற்றத்தை கொணர்ந்தவர். எதையும் விடவும் முடியாது. இரண்டரை மணி நேரம் என்றாலும் இன்னமும் கொஞ்சம் விரிவாய் சொல்லி இருக்கலாமோ என்றே தோன்றியது.

பெரும்பாலும் குறைகள் இன்றி, கதையை தொய்வின்றி நகர்த்தி சென்றதில் வெற்றியே. ராமானுஜரின் மனைவியை பிரிந்தது சரி. இறுதியில் அந்த கேள்வி நேரம் எதற்கு என்று தெரியவில்லை. நாடகமே ஒரு 2 மணி நேரத்திற்கு சுருக்க பட்டிருக்கலாம்.

ராமானுஜரின் சீர்திருத்தங்கள், அவர் சாதியை ஒழிக்க முன்னெடுத்த முயற்சிகள் மற்றும் அவர் கொண்டு வந்த கோயில் ஒழுங்கு முறை போன்றவையே நாடகத்தின் முனைப்பாய் இருந்திருக்க வேண்டும். அது இன்றைய காலகட்டத்திற்கு தேவை மற்றும் ராமானுஜரை வைணவத்தில் இருந்து இன்னும் பரவலாய் எடுத்து செல்லும்.

நாரத கான சபாவில் இருந்த கூட்டமே 'ராமநுஜர்' இன்னமும் எவ்வளவு பேரை சென்றடைய வேண்டி இருக்கிறது என்பதற்கு சாட்சி. ஒரு மத தலைவராய் மட்டும் அன்றி அவரை ஒரு சீர்திருத்த வாதியாய் முன்னிறுத்துவதில் தான் நாம் அவரது கருத்துகளுக்கு தரும் மரியாதை இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல முயற்சி. அழகிய சிங்கர் சொன்னது போல் 'ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா'. சிலசமயம் வாசிப்பனுபவம் மேடையில் கிட்டுவதில்லை.

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...