துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன்
நேற்றிரவில் துப்பறிய
சென்றிருந்தேன்.

சிவாஜி கணேசன்
துப்பறியும் கதையின்
நாயகர் அல்லர்.
அது ஜெயசங்கர் ஆகும்.

ஆனாலும்
அது சிவாஜி கணேசன் தான்
என் கனவில்.

பல மாடிகளில்
இறங்கும் படிகளில்
தலை தெறிக்க
இருவரும் ஓடி வந்தோம்.

ஒரு ஓட்டலில் இருந்து
அவருடன் தப்பி
ஓடி வரும் போது
ஸ்ரீதேவியுடன் ஒரு
டூயட் பாடிக்கொள்ளவா
என்று கேட்டார்.

பதிலுக்கு காத்திராமல்
இறுக்க கட்டிய பெல்ட்டுடன்
கொட்டும் மழையில்
டூயட் பாட சென்றுவிட்டார்.

இங்கே வில்லன்களை
அடித்து துவைப்பது யார்?

அடுத்த முறையாவது
ஜெய்சங்கருடன்
துப்பறியவேண்டும்.

No comments:

Moonrise Kingdom

Another long flight was made palatable by a delightful movie to watch and savor. I picked 'Moonrise Kingdom' by the name of Wes And...