இரண்டாம் ஆண்டு கல்லூரி ஆரம்பத்தில் எழுதியவை. இன்றைய என் கவிதை அளவீடுகளின்படி பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனால் அன்றைய எனது சிந்தனைகளின் ஒரு பதிவாக மட்டுமே இன்று வாசிக்க முடிகிறது.
காய்ந்த சருகுகளாய்
உதிரப் போகும்
வருத்தத்தில்
மல்லிகை மொக்குகள்.
யாரோ
வந்து கதவைத் தட்டி
கடத்த போகும்
கனவில்
கன்னிகள் .
மனதில் பொங்கும்
சந்தோசத்தை
சொல்ல முடியாது
வானில் இருக்கும்
நட்சத்திரங்களை எண்ணிக்
கொண்டு வாலிபம்.
நுரைத்து பொங்கும்
வாழ்க்கையை
கரைத்து குடித்துவிட்ட
நிம்மதியில் முதுமை.
தொலைத்து விட்ட முகத்தை
தார் ரோட்டில்
தேடிக் கொண்டே..
கிழிய போகும் பக்கங்களை
நடுநடுவே
எண்ணிக் கொண்டே..
எங்கோ
போகும்
ஏதோ ரோட்டில்
ஏகாந்தத்தின்
அமைதியில்
உன்னை
எதிர்நோக்கி ..
நான்.
ஜூன் '94
Edward Munch இன் 'Madonna' எனக்கு பிடித்த ஓவியங்களில் ஒன்று. ஏனோ இங்கு சேர்க்க தோன்றியது.
எல்லாம் முடிந்த பின்னரும்
தலைக்குள் குடைச்சல்.
கண்களில் தூக்கத்தை நிரப்பும் இரவு.
குளிரும் நேரத்தில்
ரோமக்கால்கள் சிலிர்க்கும்.
நாளைய சூரியன்
எங்கே உதிப்பான் என
சிந்திக்க தோன்றாமல்
பல மாதங்களுக்கு அட்டவணைகள்.
எல்லாம் என்றால் எதுவென
தேடி அலைச்சல்.
முடிந்துவிட்ட கனவை மட்டும்
தொடர தொடர..
எங்கிருந்தோ வரும் எதோ
ஒன்றிக்காக
மீண்டும்
காத்திருத்தல்கள்.
8/8/94
காய்ந்த சருகுகளாய்
உதிரப் போகும்
வருத்தத்தில்
மல்லிகை மொக்குகள்.
யாரோ
வந்து கதவைத் தட்டி
கடத்த போகும்
கனவில்
கன்னிகள் .
மனதில் பொங்கும்
சந்தோசத்தை
சொல்ல முடியாது
வானில் இருக்கும்
நட்சத்திரங்களை எண்ணிக்
கொண்டு வாலிபம்.
நுரைத்து பொங்கும்
வாழ்க்கையை
கரைத்து குடித்துவிட்ட
நிம்மதியில் முதுமை.
தொலைத்து விட்ட முகத்தை
தார் ரோட்டில்
தேடிக் கொண்டே..
கிழிய போகும் பக்கங்களை
நடுநடுவே
எண்ணிக் கொண்டே..
எங்கோ
போகும்
ஏதோ ரோட்டில்
ஏகாந்தத்தின்
அமைதியில்
உன்னை
எதிர்நோக்கி ..
நான்.
ஜூன் '94
Edward Munch இன் 'Madonna' எனக்கு பிடித்த ஓவியங்களில் ஒன்று. ஏனோ இங்கு சேர்க்க தோன்றியது.
எல்லாம் முடிந்த பின்னரும்
தலைக்குள் குடைச்சல்.
கண்களில் தூக்கத்தை நிரப்பும் இரவு.
குளிரும் நேரத்தில்
ரோமக்கால்கள் சிலிர்க்கும்.
நாளைய சூரியன்
எங்கே உதிப்பான் என
சிந்திக்க தோன்றாமல்
பல மாதங்களுக்கு அட்டவணைகள்.
எல்லாம் என்றால் எதுவென
தேடி அலைச்சல்.
முடிந்துவிட்ட கனவை மட்டும்
தொடர தொடர..
எங்கிருந்தோ வரும் எதோ
ஒன்றிக்காக
மீண்டும்
காத்திருத்தல்கள்.
8/8/94
No comments:
Post a Comment