உதிரம் கேட்கும் சாமிகள்



சாதாரண நாட்களில்
அசைவம்தான் கேட்பார்
சாமியாடி.

சுருட்டும் சாராயமும்
மாட்டுக்கறியும்
கருப்பசாமிக்கு.

நாட்டுக்கோழியும்
ஆட்டுக்கறி வருவலும்
அய்யனாருக்கு.

வருடம் தவறாமல்
கொடையும்
குத்தாட்டம் போட
தக்சணாவும்
எப்போதும் உண்டு.
எங்களூர் 
குலசாமிகளுக்கு.

இந்த வருடம்
உதிரமும் கேட்டு
இறங்கியிருக்கின்றன 
புது சாமிகள்.

இருண்ட நாட்களின்
ஊளையிடும் ஓநாய்களின்
வெறியாட்டத்தில்
தேரிக்காட்டின் மண்
மீண்டும் ஒரு முறை
சிவந்து கொண்டிருக்கிறது.

24/5/18

தூத்துக்குடியில் வேட்டையாடப்படும் என் மக்களுக்காக .. 
என் துயரத்தை எழுதி மட்டுமே கடக்க முடிகிறது. 


1 comment:

ராஜி said...

ஐய்யனார் கூட ஒரு உயிர்பலியோடு தங்கள் தாகம் தீர்த்துக்கும். ஆனா, இப்ப இருக்கும் சாமி இதுவரை 12 உயிர் பலி வாங்கி இருக்கு சகோ.

பதில் அளித்து நானும் கடந்து விடுவேன்,

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...