அருகர்களின் பாதை
ஜெயமோகன் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவது மாதிரியான சிக்கல் வேறில்லை.
'அருகர்களின் பாதை' இந்திய சமண வழித்தடங்களை தேடிய பயணம். பயணக்கட்டுரை ஆயிற்றே என்று வாங்கினேன். ஒன்று இரண்டு கட்டுரைகள் அவை எழுதப்படும் போது வாசித்திருந்தாலும் ஒரு புத்தகமாய் வாசிப்பது என்பது அலாதியானதுதான்.
ஆனால் ஜெயமோகன் வெறும் பயண கட்டுரை மட்டும் எழுதுவதில்லை - அதனுடன் அவரது பார்வையிலான வரலாற்றையும் எழுதி செல்கிறார். அதில் எதுவும் தரவு சரி பார்க்க பட்டதா இல்லை அவற்றின் ஆதார நூல்கள் எவை போன்ற எந்த வித தகவலும் கிடையாது. இணையத்தில் கட்டுரையாக வரும்போது இது சரியானதாக இருக்கலாம் - புத்தகமாக வரும் போது - தான் பேசும் வரலாற்றுக்கு - குறிப்பாக இந்திய 'இடது சாரி' வரலாற்று ஆய்வாளர்களை போகிற போக்கில் தவறு என்று சொல்லும் இடங்களில் மட்டுமாவது எங்கிருந்து இந்த வரலாற்று தகவல்களை அவர் பெறுகிறார் என்பதை தெரிவித்து இருக்கலாம்.
அத்தகைய தரவுகள் இல்லாமையால் அவரது எந்த வரலாற்று தகவல்களையும் ஒரு பிடி உப்புடன் எடுத்து கொள்வது நல்லது. எல்லா சமண மத கோயில்களின் இடிபாடுகளுக்கும் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பு காரணியாக இருக்கிறது. சமண கோயிலாக இருந்து இந்து கோயிலாக மாறியிருக்கும் இடங்களிலும் இதே விவரணை. இரு மதங்களுக்கும் இடையே இருந்த உறவின் அகல நீட்சிகளை நோக்காமல் ஒற்றை படையாய் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதங்கள் போன்ற சிந்தனைகள் கொஞ்சம் அலுப்பூட்டுகின்றன. தத்துவங்களில் தமிழின் ஒரு முன்னோடி என்றிருக்கும் போது இந்த மேம்போக்கான போக்கு கொஞ்சம் வியப்படைய வைக்கிறது.
ஒரு பயண கட்டுரையாக இந்த பயணம் வியக்க வைக்கிறது. கிட்டத்தட்ட கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தான் வரையிலான முக்கியமான சமண கோயில்கள் எல்லாமும் இடம் பெற்றுள்ளது. இந்த பயணம் காரிலும் , சமண தர்மசாலைகளை நம்பியும் மட்டுமே என்பது இன்னுமொரு சிறப்பு. தினமும் கிட்டத்தட்ட 200-300 கிலோமீட்டர்கள் என கிட்டத்தட்ட 8000 கிலோமீட்டர்களுக்கும் மேலான பயணம். அவற்றின் அனுபவங்களே சில புத்தகங்கள் எழுத எதுவாக இருக்கும்.
இவற்றை விரித்து எழுதி இருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பயண நூல் மட்டும் இன்றி இந்த கால நாட்களின் இந்த கோயில்களின் நிலை பற்றிய ஒரு அருமையான ஆவணமாக இருந்திருக்கும்.
இணையத்தில் படிக்க, இந்த மொத்த பயண கட்டுரைகளும் இங்கே தொகுக்க பட்டுள்ளன.

No comments:
Post a Comment