இரு புத்தகங்கள் - 2

பெரும்பாலும் நான் கழக எழுத்தாளர்களையும், தோழர்களையும் படிப்பதில்லை. ஒரு அலுப்பான சித்தாந்த நோக்கோடு எழுத படுபவை எல்லாம் 'preaching to the converted' என்பது போல ஒரு சிறிய கூட்டத்தையே மையமாக வைத்து எழுதபடுபவை. பின் எதற்கு நான் பொன்னீலனின் 'மறுபக்கம்' படித்தேன்?
மதுரையில் உள்ள New century book house என்னுடைய சிறுவயது வாசிப்பை நிர்ணயித்ததில் பெரும் பங்கு வகித்தது. மிகவும் மலிவான ரஷ்ய பதிப்பகங்களின் நூல்கள் மூலமாகவே எனக்கு Dostoyevsky, டால்ஸ்டாய் போன்றவர்கள் அறிமுகமானார்கள். இன்றும் எனக்கு மிகவும் பிடித்த புஷ்கினின் 'Queen of spades' ஐ முதலில் நான் தமிழில் படித்ததும் அங்குதான். இப்போது உள்ள NCBH கிட்டத்தட்ட கடந்த காலத்தின் ஆவி போன்று இருக்கிறது. இப்போது தமிழில் புத்தகங்கள் பதிப்பித்தாலும் அந்த மலிவு விலை பதிப்புகள் எல்லாம் சோவியத் ரஷ்யவுடன் முடிந்துவிட்டது.
'
மறுபக்கம்' எண்பதுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மண்டைக்காடு கலவரங்களை பற்றி பேசுகிறது. அதன் காரணிகள், இன்றைய நிலைமை, மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள். சேது அக்கலவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய பனை விளை வருகிறான். அங்கு தோழர்
வெங்கடேசன் உதவியுடன் அந்த கலவரத்தில் பங்கெடுத்த மற்றும் பாதிக்கப்பட்ட பலரையும் சந்திக்கிறான். இவற்றுக்கு ஊடே 'தோள் சீலை' போராட்டத்தில் இருந்து அய்யா வைகுண்டசாமி, நேசமணி என அப்பகுதியின் வரலாறும் சொல்லப்படுகிறது.
ஒரு வரலாறு எனும் முறையில் இது ஒரு முக்கியமான நாவல். அவ்வளவே. சேது ஒரு மதவாதியாக அறிமுகமாகி (அதுவும் தெளிவாக இல்லை) கதையின்நடுவில் திடீரென்று இடது சாரி தோழராகி போகிறான். அதற்கு முத்துவை காதலிப்பதற்கு என்பதை தவிர முக்கியமான காரணம் எதுவும்சொல்லப்படவில்லை. ஒரு வேளை அவன் கேட்க்கும் கலவரம் பற்றிய கதைகளால் பாதிக்க பட்டு அதனால் மாறுகிறான் என்பதற்கும் ஒருமுகாந்திரமும் இல்லை. ஒரு மதவாதியால் வளர்க்கபட்டதாய் காட்டப்படும் அவன் எப்படி தன் கொள்கைகளை அப்படி மாற்ற முடிந்தது என்ற கேள்வியே இந்த நாவலை வாசிப்பதில் ஒரு தடங்கலாய் விடுகிறது. இரு முறைதிருமணத்தில் ஏமாற்றமடைந்த முத்து மட்டுமே consistent ஆக தன்னை நாவல்முழுவதும் காட்டிக் கொள்கிறாள். சித்தாந்தத்தின் உந்துதலில் மட்டுமே எழுதப்படும் கதை இப்படி இருக்கும் போல்.
மண்டைக்காடு கலவரங்களை விசாரித்த கமிஷனின் அறிக்கையே இந்தநாவலின் அடிப்படையாக இருக்கிறது. ஒரு வரலாற்றின் பதிவு என்ற முறையில்வாசிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. அய்யா வைகுண்ட சாமியின் மெய் வழிசாலை, பனையேறி மக்களின் வாழ்வு போன்றவை நான் கேட்டு வளர்ந்த பலகதைகளின் நீட்சியாகவே இருந்தது.
சிறு தெய்வங்களின் கோவில்கள் எப்படி மெதுவாக மாற்றப்படுகின்றன என்பதுகதையின் இன்னொரு திரி. முத்தாரம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன்போன்ற தெய்வங்களின் கோவில்கள் எப்படி மெதுவாக அவற்றின்தனித்தன்மையை இழக்கின்றன என்பது அந்த நாட்டார் கதைகளுடனும்சொல்லப் படுகிறது. சிவகாசியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் இந்தமாற்றத்தை நேரில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த கோவிலின் குளத்தருகே ஒரு ஐயப்பன் கோவிலும் உண்டு.
ஒரு கதையாக அல்லது ஒரு நல்ல நாவலாக இல்லாவிடினும் ஒரு நல்லவரலாற்று ஆவணமாக படிக்கலாம்.

அடுத்து 'பின் தொடரும் நிழலின் குரல்' படித்து கொண்டிருக்கிறேன். பின்னொரு சமயம் அது பற்றியும் எழுதுவேன்.1 comment:

tamil said...

மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...