இரு புத்தகங்கள்

"கரீமே...உன்னையும் என்னையும் நமக்கு முன் தோன்றியும்மறைந்துமிருந்தவர்களையும் இந்த இரவு அறிந்திருக்கிறது. இரவெனும் ரகசியநதி எப்போதுமே நம்மை சுற்றியோடிகொண்டிருக்கிறது. அதன் மிருதுவும்பரிமளமும் நாம் அறிந்திருகிறோமேயன்றி அதன் விகாசம் கண்டதில்லை"

இவ்வாறாய் ஆரம்பிக்கிறது 'யாமம்'. எஸ். ராமகிருஷ்ணனின் அறிமுகம் 'தேசாந்திரி' மூலமே கிடைத்தது. பெரிதாய் தாக்கம் இல்லை எனினும் மேலும்தேட வைத்தது. 'உப பாண்டவம்' துரியன் கூத்தில் ஆரம்பித்து இரவின் ஊடேபயணிக்கும் கதை. இரவின் வழியே செல்லும் அதுவும், வெயிலின் கடுமையாய் உறைத்த 'நெடுங்குருதி'யும் மேலும் தேட வைத்தது.


'யாமம்', அதன் பெயரை போல், இன்னுமொரு இரவின் வழி ஊடாடி செல்லும்கதை. கரீம், கிருஷ்ணப்ப கரையாளர், பத்ரகிரி, சதாசிவ பண்டாரம் ஆகியோரின் கதையாக சென்னை பட்டினத்தின் ஆரம்ப காலங்களில் தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முடிகிறது. காலம் ஒரு அளவீடாக இல்லாமல்இரவின் வழியே பாய்ந்து செல்லும் நதியாய் இருக்கிறது.

'யாமம்' என்ற அத்தர் காம கடும் புனலாய் கதையின் எல்லா பாத்திரங்களின்வாழ்விலும் செல்கிறது. கரீம் அதனை உருவாக்கினாலும் அதன் பலன் இன்றிதன் ரோஜா தோட்டத்தை பாழியாக்கிவிட்டு காணமல் போகிறார். கிருஷ்ணப்பகரையாளர் மலை காடுகளின் நடுவே ஞானம் வந்தவராய் சொத்துகளை பங்காளிக்கு விட்டு குடுத்து தன் சந்தோசத்தை அடைகிறார்.

பத்ரகிரியின் கதை கொஞ்சம் சிக்கலானது. லண்டனில் உள்ள தம்பியின் மனைவியிடம் காமம் கொண்டு வாழ்வை இழக்கிறான். உறவுகளின் குழப்பத்தில்வாழ்வின் விழுமியங்கள் தடம் மாறுகின்றன. காமம் ஓங்கி அடங்கியவுடன் குற்றஉணர்வின் குழப்பத்தில் தடுமாறுகிறான். தம்பி திரும்பி வந்து அண்ணன்குழந்தையை வளர்க்க ஆரம்பிப்பதுடன் முடிகிறது.

சதாசிவ பண்டாரம் கதையின் எல்லோரையும் ஒரு வகையில் காட்டுகிறார். நீலகண்டம் என்ற நாயை தொடரும் பரதேசியான அவரின் கதையே ஒருவகையில் கதையின் எல்லோரின் கதை ஆகிறது. ஒவ்வொருவரும் ஒரு நாயை பின்தொடர்கிறார்கள் எந்த காரணமும் இன்றி.

யாமமும், இரவும் கதை முழுவதும் வியாபித்திருகிறது. கதை மாந்தர்கள்எல்லோரும் ஒரு நிலையில் அதன் மயக்கத்தில் விழுகிறார்கள். பின்எழுகிறார்கள்.


'நெடுங்குருதி'யில் தாங்க முடியாத வெயிலை காட்டிய ஆசிரியர், 'யாம'தில்இரவின் நதியை காட்டுகிறார். வெயில் கண்ணை கூசியது என்றால் இதில்எல்லோரும் இரவின் கருமையில் தடுமாறுகிறார்கள்.

'யாமம்' முழுவதும் இரவு நீண்டு கொண்டே இருக்கிறது. வாழ்வு கடந்துகொண்டே இருக்கிறது. இரவின் நீட்சியாய் காமம் கசிந்து கொண்டே இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணனின் முக்கியமான படைப்பாக நான் இதை கருதுகிறேன். எனக்கும் வெயிலைவிட இரவே பிடிக்கிறது.

(தொடரும்)

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...