கோடிக்கரை / கோடியக்காடு - 2

இந்த சரளைக்கற்களின் பாதையின் முடிவில் திறந்த வெளிக் குறைந்து புதர்கள் இன்னமும் அடர்த்தியாக இருக்கின்றன. அதுவரை தூரமாக தெரிந்த கலங்கரை விளக்கம் சட்டென்று அருகில் வருகிறது. இந்த இடங்களில் சதுப்பு நிலம் இன்னமும் கலங்கிய நீருடன், புதை மணல்களை தன்னுள் கொண்டு அமைதியாக இருக்கிறது. புதை மணலில் புதையும் ரவி தாசனின் அவலக்குரல் மெதுவாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்க்கலாம் எனினும் மாலை வேளைகளில் மட்டுமே இது திறக்க படுகிறது. இதை தாண்டியவுடன் ஒரு மணற்குன்றின் முன் பாதை முடிவுறுகிறது. அலைகளின் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது.

அந்த மணற்குன்றின் மீதேறினால் பறந்து விரியும் கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரியும் மணற்க்கடற்க்கரை. இந்த பரந்த வெளியில் கடந்து போன வாழ்வின் எச்சமாய் ஒரு இடிந்த கலங்கரை விளக்கம். அது ஒரு கலங்கரை விளக்கம் என்பதே அதை பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே ஊகிக்க முடியும். 

கோடியக்காட்டின் கடல் மிகவும் கலங்கலாகவும், அலைகளோடும் இருக்கிறது. பல இடங்களில் கடல் உள் வந்து இருப்பது தெரிகிறது. கடற்கரை இன்னமும் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்பதால் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது.
சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தின் மிச்சம் இந்த கரையில் கடந்து போன வரலாற்றின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. 1100 வருடங்களுக்கு முன் இந்த அத்துவான காட்டின் முடிவிற்கு வந்து அங்கு ஒரு கலங்கரை விளக்கும் அமைக்க தேவை என்ன?

என்ன மாதிரியான இடமாக இது இருந்தது அப்போது? கடலோடிகளாய் தமிழர்கள் இருந்ததற்க்கான குறிப்புகள் சிலவே. கடலோரம் முழுதும் சென்றிருந்தாலே ஒழிய இந்த இடத்தில் நிலம் திரும்புவதும் அதன் பொருட்டு ஒரு கலங்கரை விளக்கின் தேவையும் உணரப்படிருக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு கடல் வாணிபம் இந்த பக்கமாக நடந்திருந்தாலே இதன் தேவை அவசியமாகி இருக்கும்.

இது போன்ற நினைவுகளின் ஊடே இந்த அழகிய கடற்கரையில் ஒரு தூரம் நடந்து விட்டு வந்தேன். மேலே ஏறி பார்ப்பதற்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. கோடியக்காட்டின் அழகின் ஒரு சிறு பகுதியை இங்கு இருந்து பார்க்க முடிகிறது.

'பொன்னியின் செல்வனில்' கல்கி குழகர் இன்னமும் தனிமையில் இருப்பது பற்றி எழுதுகிறாரே ஒழிய இந்த கலங்கரை விளக்கின் நிலை பற்றி எழுதவில்லை. இப்போது வெறும் அரை வட்டமான செங்கல் குவியலாய் மட்டுமே நிற்கிறது இந்த கலங்கரை விளக்கம்.

கிளம்ப மனமில்லாமல் இங்கு திரிந்து விட்டு மெதுவாக காருக்கு திரும்பினேன். திரும்பி வரும் போது இன்னமும் நிறைய வெளிமான்களும், புள்ளி மான்களும் பார்த்தேன். பெட்டை மயில்கள் நிறையவும் ஓடித் திரிந்து கொண்டிருந்தன. ஒற்றை காட்டுப் பன்றியும் நின்று எங்களை வெறித்துக் கொண்டிருந்தது.

இவ்வளவு தூரம் வந்து விட்டு குழகரை பார்க்காமல் வந்தால் எப்படி? வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று கோயிலுக்கு சென்றேன். குழகர் கோயிலை காணவில்லை. இங்கிருந்த சோழர் கால குழகர் கோயிலுக்கு பதிலாக நாம் நமது கலைத்திறனுடன் ஒரு புதிய கோயிலை சமைத்திருக்கிறோம். வாசலில் இருக்கும் இரண்டு துவார பாலகர்கள் மட்டுமே சோழர்களை நினைவுருத்துகிறார்கள்.

அப்படியே அங்கிருந்து கிளம்பி வேதாரண்யம் வந்து சேர்ந்தேன்.

More pictures here --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5929965155419744513

2 comments:

ramanan.pg said...

கடலோடிகளாய் தமிழர்கள் இருந்ததற்க்கான குறிப்புகள் சிலவே. கடலோரம் முழுதும் சென்றிருந்தாலே ஒழிய இந்த இடத்தில் நிலம் திரும்புவதும் அதன் பொருட்டு ஒரு கலங்கரை விளக்கின் தேவையும் உணரப்படிருக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு கடல் வாணிபம் இந்த பக்கமாக நடந்திருந்தாலே இதன் தேவை அவசியமாகி இருக்கும்..... வரலாற்றைச் சற்று கூர்ந்து படித்தால் புரியும்.இன்றய Keda என்ற மலேசிய நாட்டுப் பகுதியிலிருந்தும், இந்தோநேசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்ட வாசனைப் பொருட்கள் பூம்புகாரில் யவனர்களுடன் வாணிபம் செய்யப்பட்டது. தாய்லாந்திலும், வளைகுடா நாட்டிலும் தமிழ் எழுத்துக்கள் கொண்ட மட்பாண்டங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.தமிழர்கள் இந்தியத் துனைக் கண்டத்தின் பிற பகுதிகளைவிட மேலை நாடுகளுடன் செய்த வாணிபமே அதிகம்.

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...