அலைகளின் பாடல் - தரங்கம்பாடி - 1

கோடியக்கரையின் நினைவுகளுடன் வேதாரண்யத்தில் அடுத்த நிறுத்தமான தரங்கம்பாடி செல்ல பேருந்து ஏறினேன்.


கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் போல் கடலுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு கூடவே வந்தது. இந்த பக்கங்களில் பக்கங்களில் இறால் வளர்ப்பு இருப்பதால் ஒரு புறம் முழுவதும் இறால் குளங்கள் இருக்கின்றன.

காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி 8 கி.மீ. தூரம் இருக்கிறது. சிறு கிராமம். சென்றவுடன்  சிறிது நேரம் இளைப்பாறி விட்டு தரங்கம்பாடியை பார்க்க கிளம்பினேன்.

தரங்கம்பாடி என்றால் அலைகளின் பாடும் இடம் என்று பொருள். டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததன் மிச்சமாய் இன்று ஒரு கோட்டையும் அதை சுற்றிய சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.

தஞ்சாவூர் ரகுநாத நாயக்கரிடம் இருந்து இந்த இடத்தை 1650களில் டென்மார்க் அரசின் கிழக்கிந்திய கம்பெனி வாங்குகிறது, இங்கு வரும் வணிகர்கள் தங்குவதற்கு இடங்களும் இந்த இடத்தை நிர்வகிக்க ஒரு கவர்னரும் சில நூறு சிப்பாய்களும் வந்து இறங்குகின்றனர்.

இந்த கரைகளில் வந்து இறங்கிய டேனிஷ் மக்களில் இன்றும் நினைவுகூரபடுபவர், பர்தலோமேவ் சீகன்பல்க். முதலில் அச்சடிக்கும் இயந்திரத்தை கொண்டு வந்தவர். இங்குதான் தமிழின் முதல் புத்தகம் அச்சடிக்கப் பட்டது. விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு அச்சடிக்கப்பட்டது.

இன்றைய தரங்கம்பாடி கொஞ்சம் பெரிய மீன் பிடி குடும்பங்கள் வாழும் கிராமம் மட்டுமே. இன்றும் இதன் ராஜ வீதி (king's way) மட்டுமே பழைய கட்டிடங்களுடன் இந்த வரலாற்றை நினைவு படுத்தி இருக்கிறது.
சீகன்பல்க் ஒரு சீர்திருத்த கிருத்துவத்தின் பாதிரி. லூதரன் மிசன் சர்ச்சின் மூலமாக கிருத்துவத்தை பரப்புவதற்காக வருகிறார். ஒரு சர்ச்சும் கட்டுகிறார். தமிழ் கற்றுக் கொண்டு விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்கிறார். தமிழிலேயே பிரசங்கங்கள் செய்து கிருத்துவத்திற்கு மனம் மாற்றுகிறார். இன்றும் லூதரன் சர்ச்சின் இந்திய பிஷப் 'Bishop of Tranquebar' என்றே அழைக்கப் படுகிறார்.


சீகன்பல்க் நிறுவிய அந்த சர்ச் இன்றும் நல்ல முறையில் இருக்கிறது. இந்த சர்ச்சிலேயே சீகன்பால்கு புதைக்க பட்டிருக்கிறார். சர்ச்சின் கல்லறை தோட்டத்தில் இங்கு வந்து இறந்து போன பல டேனிஷ் மக்களும், இந்த சர்ச்சின் பாதிரிகளும் அடக்கம் செய்ய பட்டிருக்கிறார்கள்.

இதற்கு பக்கத்திலேயே முதல் புத்தகம் அச்சடிக்கப் பட்ட கட்டிடம் இருக்கிறது.
Dansborg என்றழைக்கப் பட்ட கோட்டையின் எதிரில் அன்றைய கவர்னரின் பங்களா இருக்கிறது. பங்களா புதுப்பிக்க பட்டு கொண்டிருப்பதால் வெளியில் இருந்து மட்டுமே பார்க்க முடிகிறது.

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...