காலடியில் ஆகாயம்


இந்த ஆண்டு புத்தக சந்தையை சென்ற சனிக்கிழமை சென்றிருந்தேன். காலச்சுவடு அரங்கில் புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த போது ஆனந்தின் கவிதை தொகுப்பான 'காலடியில் ஆகாயம்' புது பதிப்பு வந்ததை கண்டேன்.

1992இல் பள்ளி நாட்களில் மீரா, அப்துல் ரகுமான் என்று ஒரே கவிதை நூல்களாக படித்து கொண்டிருந்த நேரம். வார மலர் கவிதைகளை பின்பற்றி நானும் இளைஞர்களை புரட்சி பண்ண கவிதை மூலம் அழைத்து கொண்டிருந்த நேரம்.மாதம் என் அப்பா கொடுக்கும் சிறு தொகையில் மதுரை சர்வோதயா புத்தக பண்ணையில் சென்று ஒன்று, இரண்டு புத்தகங்களை வாங்குவது வழக்கம். அப்போது ஒரு முறை சிறு எழுத்துகளில் விருட்சம் வெளியீடாக ஆனந்த் என்பவரின் 'காலடியில் ஆகாயம்' தொகுப்பை வாங்கினேன்.


முதல் வாசிப்பில் சிறிதும் புரியாது வார்த்தை ஜாலம் இன்றி சிறு கவிதைகளாக அது வரை நான் படித்து இருந்த கவிதைகளை எல்லாம் புரட்டி போட்டது.

கவிதை என்பதை அறைகூவலாகவும், விரக தாப முனகல்களாகவும் வாசித்து கொண்டிருந்த எனக்கு முற்றிலும் வேறு விதமான அனுபவமாக இருந்தது.

அப்துல் ரகுமான் மூலம் ஓரளவிற்கு உலக கவிஞர்களின் கவிதைகளை தமிழாக்கம் செய்து படித்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் காதல் கவிதைகள்.

ஆனந்தின் கவிதைகள் முழுவதும் வாழ்வின் மன பதிவுகளாக, படிமங்களின் மூலம் மனதின் அதிர்வுகளின் எழுத்து வடிவமாக இருந்தது. முழுவதும் புது முறையான அனுபவமாக இருந்தது. பல இரவுகள் ஒவ்வொரு கவிதையும் படித்து அது ஏற்படுத்தும் அனுபவங்களை அசை போடுவது ஒரு தனி சுகமாகி போனது.

நான் அதிகமாக வாசித்திருந்த கவிதை புத்தகமானதாக ஆகி போனது. ஒவ்வொரு பக்கமும் அந்த கவிதைகள் பற்றிய என் கருத்துகளை எழுதி வைத்தேன்.

புது கவிதைகள் என்பது என்ன என்ற எனது மொத்த புரிதலையும் மாற்றி அமைத்த புத்தகம் இது. இதற்க்கு பின்னாலும் சில வருடங்கள் standard formatஇல் கவிதை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் தமிழின் சிற்றிதழ், புதுக்கவிதை உலகத்தை இந்த புத்தகம் அறிமுகப்படுத்தியது.

இதற்கு பின்னல் நான் கவிதை எழுதுவது என்பது முற்றிலும் மாறி போனது. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட நின்றே போனது. கவிதை எழுதும் மனம் என்பதே அருகி போனது. எலிகளுக்கு பின்னால் ஓட ஆரம்பித்ததில் கவிதைகளை வாசித்து ரசிப்பது என்பது ஒரு luxury ஆனது.

ஆனால் இன்றும் இந்த புத்தகம் அறிமுகப் படுத்திய உலகம் மனதிற்கு அருகாமையில் இருக்கிறது.

இந்த புத்தக சந்தையில் ஒரு கவிதை புத்தகம் வாங்க நினைத்தீர்களானால் 'காலடியில் ஆகாயம்' முதலாவதாக இருக்கட்டும்.

8 comments:

King Viswa said...

பரிந்துரைக்கு நன்றி.

anandh said...

இந்தக் கவிதைகளைப் படித்து ரசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது... ஆனந்த்

Muthu Prakash Ravindran said...

Are you THE ஆனந்த்? என்றால் இன்றைய பொழுது இனிதாகிறது..நன்றி ..

anandh said...

ஆமாம்... உங்களை அறிந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி...

anandh said...

நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? . . . ஆனந்த்

Muthu Prakash Ravindran said...

Chennai..

anandh said...

I have published another collection of poems... I can send this to you if you give your address...

Muthu Prakash Ravindran said...

Oh..I bought அளவில்லாத மலர் in this book fair. Is it a newer one? Please send your email address to rmuthuprakash@gmail.com and I will share the address.

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...