உன் பிரியத்தின் பொருட்டு

உன் பிரியத்தின்
பொருட்டே
என் வாழ்வு
முழுமை பெறுகிறது.

இழந்த நாட்களில்
தொலைந்த சந்தோசங்களில்
மனதில் அமிழ்ந்தது
உன் நினைவு.

கரைந்த கணங்களில்
நெகிழ்ந்த மனதில்
சிறு தளிராய் உன் புன்னகை.

கண்ணில் வழியும் நீராய்
உயிரின் வலியாய் நீ.

மனதின் காதலில்
எரியும் காமத்தில்
உன் பார்வையின் வெளிச்சத்தில்
என் வாழ்வு நகர்கிறது.

உன் பிரியத்தின்
பொருட்டாய் மட்டும்...

13/11/16

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...