இரு கவிதைகள்

வார்த்தைகள்
வற்றிப் போகும்
நினைவுகள்.

மெல்லச் சிதறும் 
கடந்த கால
காதல்கள்.

மெதுவாய் விலகிப்போகும்
முகங்கள்.

வருடங்களின் சுழற்சியில்
வலிகளின் அழுத்தத்தில்
மாறிப்போகும்.

பிறந்த நாள்களின்
சந்தோஷத்தில்
என் மகளின்
குழந்தை மனம்
அறிவின் விருத்தத்தில்
தொலைந்து போகும்.

நிதமும் எழும் சூரியனும்
ஒருநாள் எரிந்து போகும்.
எதையோ தேடி தேடி
என் வாழ்வும்
முடிந்து போகும்.

------------

வெளியே
வெறித்த பார்வைகளின் நடுவே
நிகழும் விவாதங்கள்.

காற்றில் கரையும்
மேகங்கள்.
மெல்லிய திரையாய்
வெளியே விழும் வெயில்.
அறையின்
செயற்கை குளிர்ச்சியில்
ஏக்க பார்வைகள்.

சுற்றும் வார்த்தைகள்
அர்த்தமில்லாமல்
எதிரொலிக்கும்.
மெதுவாய் அசையும் மரங்கள்
பரிதாபமாய் என்னை
பார்க்கும்.

April 2015

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...