தலைப்பில்லா கவிதை

என் பயண குறிப்புகளை முடிப்பதற்கு முன்னால் ஒரு சிறு கவிதை (அப்ப பெரிய கவிதை எப்படி இருக்கும்?)

என் நாட்குறிப்பின்படி இதை நான் 9-ஏப்ரல்-1997இல் எழுதி இருக்கிறேன். இக்கவிதை எழுத தூண்டிய காரணிகள் இன்று எனக்கு இல்லை. எனக்கு இன்னும் அந்த கவித்துவ மன நிலை இன்று இருக்கின்றதா என்றே எனக்கு சந்தேகம் உண்டு. ஆனால் அது மற்றுமொரு நாளைக்கு. இப்பொழுது கவிதை.

வெறித்து பார்க்கும்
பார்வைகள்.
அர்த்தமில்லா
எதிர்பார்ப்புகள்.
யாரோ எதற்காக
எனக்காக அழ வேண்டும்?
நானே அர்த்தமில்லா
புள்ளியாய் தேயும் போது
கணக்கில்லா கனவுகள்.

நெஞ்சில் தேங்கும்
சாக்கடையாய் மாறும்.
பிரிந்து செல்லும்
நேரம்.
நெஞ்சை வருத்தும் நினைவுகள்.
மரணம் மெல்ல நகும்.

இன்று இந்த கவிதைக்கு என்னாலேயே அர்த்தம் கூற இயலாது. என் கல்லூரி நாட்களின் எச்சம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இது தவிர்த்து, இப்பொழுது நான் அடித்து கொண்டிருக்கும் இந்த transliteration software எவ்வளவு அருமையாக இருக்கிறது. Google has done a fantastic job!.

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...