மற்றுமொன்று..

25-1-1997
கன்னக் கதுப்பில்
மினுக்கும்
மெல்லிய முடி.
தொடுவானில் ஒளிரும்
புன்னகை.
சூர்யமுகம்.
உவமைகளில்
உன்னை அடக்க முடியாது.
என் அழகிய அதிகாலை கனவே!
நடுஇரவில் விழிக்கும் பிள்ளை போல
என்னை
எத்தனை நாள்
அழ வைக்க போகிறாய்?

இப்பொழுது படிக்கையில் இது மிக சுமாரான கவிதையாக படுகிறது. கவிதையின் மைய்யம் கடைசி நான்கு வரிகளில் இருப்பதால் முதல் சில பல வரிகள் தேவை இன்றி இருக்கின்றது. ஆனால் இது எழுதி பதினொன்று ஆண்டுகள் ஆகி விட்டது என்பதால் ஒரு curio போன்று ஒரு ஈர்ப்பு.

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...