பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 3

பேருந்துகள் எல்லாம் 4-5 என்று ஒன்றாக போலீஸ் பாதுகாப்புடன் இயக்க படுவதால் ஒரு அரை மணி நேரம் பேருந்து எல்லாம் நின்றாலும், போலீஸ் வேன் வராததால் மதிய வெயிலில் எல்லா பேருந்துகளும் இன்னமும் ஒரு 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டன.


திரிபுவனம்


கம்பஹேஸ்வரர் அருள் பாலிக்கும் இந்த கோயில் இரண்டாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட தஞ்சை கோயிலின் மாதிரியில் இருக்கும் இந்த கோயிலில் இருக்கும் சிற்ப்பங்கள் பற்றி சில்பி பெரிதும் சிலாகித்து எழுதுகிறார்.

அந்த எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு அந்த கோயிலின் இன்றைய நிலையை பார்த்தவுடன் அழ மட்டுமே தோன்றியது. இந்த கோயிலில் நடந்திருக்கும் திருப்பணியை பார்த்த போது, பழையாறை கோயில் அடையபோகும் உன்னத நிலை கண் முன்னே விரிந்தது.

கொஞ்சமும் வரலாற்று பிரக்ஞை இல்லாமல் போனாலும் பரவாயில்லை. கொஞ்சமும் கலா ரசனையும், சற்றும் அழகியல் மனதும் இல்லாத வெறும் தாள்களில் கையெழுத்து போட்டு பணத்தை மட்டும் கணக்கு போடும் மனிதர்களால் ஒரு வரலாற்று சின்னம் எப்படி பாழ் பட்டு இருக்கிறது என்பதற்கு இந்த கோயிலே ஒரு உதாரணம்.

 சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பும் வெள்ளை சிமெண்ட்டும் அடிக்கப்பட்டு, கோயில் விமானம் பச்சை, மஞ்சள், சிகப்பு என சகட்டு மேனிக்கு வண்ண பூச்சுகள், விமான சுற்று சுவற்றில் எல்லாம் கொஞ்சம் சகிக்க முடியாத ஓவியங்கள், கருங்கல் தளங்கள் எல்லாம் அரையும் குறையுமான மார்பிள், டைலஸ்களால் சிதைக்க பட்டு, கோயிலின் முன் சம்பந்தம் இல்லாமல் ஒரு மண்டபம், அதில் உபயதாரர்கள் பெயர்கள், என்று இந்த கோயில் அதன் சோழர் கால வரலாறு சிதைக்கப் பட்டு பரிதாபமாக நிற்கிறது.
 என்னால் முடிந்த அளவு சில்பி மிகவும் வர்ணிக்கும் சுற்று சுவர் சிற்பங்களை படம் பிடித்தேன். இன்னொரு தலைமுறை இந்த கோயில் சிற்பங்கள் இருக்குமா என்பதே சந்தேகம்.

கோயிலின் சிற்று சுவர்கள் தோறும் செதுக்க பெற்றுள்ள  சிற்சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுகிறது. பெண்களும், புராண கதைகளும் சுவர் என்கும் விரவிக் கிடக்கின்றன. சில quirksஉம் உண்டு.

 யானை தூக்கி செல்லும் பெண்/ஆண்  என்பது பல சிற்பங்களில் திரும்ப திரும்ப வருகிறது. யானையின் மீதும் சிலர் அமர்ந்துள்ளனர். சிலவற்றில்  யானையின் துதிக்கையில், காலின் அடியில் என்று பீதியடைந்த முகத்துடன் பெண்கள். இந்த சிலைகளின் கதைகள் என்ன?
 அடி முடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் செல்கிறார்கள். பிரம்மா அன்ன பறவையாக முடி காணவும், விஷ்ணு வராகமாக அடி காணவும் செல்வதை காட்டும் சிற்பம்.
தலை முடியை அலங்கரிக்கும் பெண். கோயில் கோபுரத்தில் நுழையும் இடத்தில் உள்ளது.பெரும்பாலான சிற்பங்கள் பின்னங்களுடனும், கரைகளுடனும் இருக்கின்றன. அன்றைய மாலை முழுவதும் இந்த கோயிலில் கழிந்தது. இரவு 7 மணிக்கு மேல் கும்பகோணத்திற்கு பேருந்து கிடையாது என்ற ஒரு காரணத்தாலே மட்டுமே கோயிலை விட்டுத் திரும்பினேன்.

மேலும் படங்கள் இங்கே -->https://plus.google.com/photos/104749384557340720796/albums/5875305700214973025

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...