பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 4 திருவையாறு

கடந்த இரண்டு நாட்களுமே கும்பகோணத்தில் இரவு 6.30க்கு மேல் எந்த பேருந்தும் இயக்க படவில்லை சென்னை பேருந்துகளும் திருச்சி வழியாக சுற்றி விடப்பட்டு சென்றன. பேருந்து நிலையத்தில் படுத்து கிடக்கும் ஜனங்களை பார்க்க பாவமாகவே இருந்தது. நான் ஒரு நாள் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தேன். சனி இரவு கும்பகோணத்தின் வியாபார தெரு முழுதும் நடந்து விட்டு வந்து படுத்தேன். எங்கு பார்த்தாலும் வெற்றிலை கறை என்பது கும்பகோணத்தின் அடையாளமாகவே இருக்கிறது. நெரிசல், கூட்டம், வெளியூரில் இருந்து நவக்ரஹ தலங்களை ஒரே நாளில் பார்த்து விட்டு செல்லும் கூட்டம் ஒரு புறம். இலக்கில்லாமல் நடக்கும் போது தட்டுப்படும் கோயில்கள், எல்லா நகை வியாபாரிகளின் கடைகள், தெருவில் வெற்றிலை குதப்பி கொண்டே அமெரிக்காவில் இருக்கும் பிள்ளையுடன் skype chat செய்ய ஓடிய பெரியவர் என்று நன்றாகவே இருந்தது.

திருவையாறு

ஐயாறப்பர் இருக்கும் திருவையாறு, கர்னாடக சங்கீத பிதாமகரான தியாகராய சுவாமிகளின் ஊர். எனக்கும் அதற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததால் நான் கோயில் உள்ளே சென்றேன். திருபுவனம் தந்த அதிர்ச்சிக்கு பிறகு அதனினும் சற்று நல்ல முறையில் இருக்கும் இந்த கோயில் கொஞ்சமாக சந்தோசபடுத்தியது.

ஐந்து ஆறுகள் ஓடும் ஊரில் இருப்பதால் ஐயாறப்பர். இப்போது ஒரு ஆற்றிலும் பெயருக்கும் தண்ணீர் இல்லை. வெறும் மணலும், மணல் அள்ளும் லாரிகளும் மட்டுமே இருக்கின்றன.

ஐந்து பிரகரங்களுடன் பிரமாண்டமாக இருக்கும் இந்த கோயில் சங்கீத பிரியர்களின் வரவால் கொஞ்சம் செழிப்பாகவே இருக்கிறது. கால சம்ஹார மூர்த்தியும், ஆல்கொண்டார் சன்னதியும் பார்க்க வேண்டியவை.

அம்மன் 'அறம் வளர்த்த நாயகியை இருக்கிறாள். இங்குதான் அப்பருக்கு கைலாய நாதனாய் சிவன் காட்சி கொடுத்ததாய் ஐதீகம். அதை பார்த்துதான் அப்பர் 'மாதர் பிறைக் கண்ணியானை' என்ற பதிகம் பாடினார்.

பிரகார சுவர்களில் இருந்த/இருக்கும் நாயக்கர் கால ஓவியங்கள் வழமை போல் பராமரிக்கபடாமல் இருக்கிறது. இது போக சோழர்களின் சிற்ப வேலைகள் கோயிலெங்கும் இருக்கிறது.

அடுத்து திருமானூர் செல்லும் பேருந்து ஏறினேன்.

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...